சமையல் குறிப்புகள்

அருமையான முட்டை மஞ்சூரியன்

முட்டையில் பொரியல், ஆம்லெட் செய்து சாப்பிட்டு இருப்பீங்க. இன்று முட்டையை வைத்து மஞ்சூரியன் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

  • முட்டை – 4
  • மிளகு தூள், உப்பு – தேவையான அளவு,
  • மைதா – கால் கப்
  • சோள மாவு – கால் கப் + 1 ஸ்பூன்
  • மிளகாய் தூள் – அரை ஸ்பூன்
  • எண்ணெய் – தேவையான அளவு
  • பொடியாக நறுக்கி இஞ்சி – 1 ஸ்பூன்
  • பொடியாக நறுக்கி பூண்டு – 1 ஸ்பூன்
  • வெங்காயம் – 1
  • குடைமிளகாய் – 1
  • சில்லி சாஸ் – 2 ஸ்பூன்
  • தக்காளி சாஸ் – 2 ஸ்பூன்,
  • சோயா சாஸ் – 1 ஸ்பூன்,
  • வெங்காயத்தாள் – சிறிதளவு.

முட்டை மஞ்சூரியன்

செய்முறை :

  • குடைமிளகாய், வெங்காயத்தாள், வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்
  • 1 ஸ்பூன் சோள மாவை கால் கப் தண்ணீரில் கரைத்து வைக்கவும்.
  • ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி அதனுடன் மிளகு தூள், உப்பு சேர்த்து நன்றாக அடித்து கொள்ளவும்
  • பின்னர் சிறிது எண்ணெய் தடவிய அகன்ற கிண்ணத்தில் அடித்து வைத்த முட்டையை ஊற்றி இட்லி பாத்திரத்தில் வைத்து 10 நிமிடங்கள் வேக வைத்து எடுக்கவும்.
  • வெந்ததும் எடுத்து துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
  • ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, சோளமாவு, மிளகாய் தூள், சிறிது உப்பு, தண்ணீர் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்தில் கலந்து அதில் முட்டை துண்டுகளை போட்டு பிரட்டி எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.
  • ஒரு கடாயை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் நறுக்கிய இஞ்சி, பூண்டை போட்டு வதக்கவும்.
  • இரண்டும் நன்றாக வதங்கியதும் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
  • அடுத்து குடைமிளகாயை போட்டு வதக்கவும்.
  • அடுத்து சில்லி சாஸ், tomato ketchup, சோயா சாஸ் போட்டு நன்றாக கிளறவும்.
  • அடுத்து கரைத்து வைத்துள்ள சோள மாவை ஊற்றி திக்கான பதம் வந்தவுடன் பொரித்து வைத்துள்ள முட்டையை போட்டு உடையாமல் கிளறி வெங்காயத்தாள் தூவி இறக்கவும்.
  • முட்டை மஞ்சூரியன் தயார்.

 

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker