சமையல் குறிப்புகள்

சூப்பரான தாங்ரி சிக்கன் கபாப்

சிக்கன் உணவுகளில் பல வகைகள் உள்ளன. அதிலும் கபாப்பில் அதிகளவு அளவு வெரைட்டி உள்ளது. சிக்கன் கபாப் ரெசிபியில், தாங்ரி சிக்கன் கபாப் ரெசிபியை எப்படி செய்வதென்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

  • சிக்கன் – 4 (லெக் பீஸ்)
  • தயிர் – 1/2 கப்
  • இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டேபிள் ஸ்பூன்
  • எலுமிச்சை சாறு – 2 டேபிள் ஸ்பூன்
  • கரம் மசாலா தூள் – 1 1/2 டீஸ்பூன்
  • மிளகாய் தூள் – 1 1/2 டீஸ்பூன்
  • மிளகு தூள் – 1 1/2 டீஸ்பூன்
  • சாட் மசாலா – 1 1/2 டீஸ்பூன்
  • கேசரி பவுடர் – 1 சிட்டிகை
  • உப்பு – தேவையான அளவு

செய்முறை:

  • சிக்கனை நன்றாக கழுவி சுத்தம் செய்து இடைஇடையே கீறி வைக்கவும்
  • ஒரு பௌலில் தயிர், இஞ்சி பூண்டு பேஸ்ட், மிளகாய் தூள் மற்றும் கரம் மசாலா சேர்த்து நன்கு பேஸ்ட் போல் கலந்து வைத்துக் கொள்ள வேண்டும்.
  • சுத்தம் செய்து கீறி வைத்த சிக்கன் லெக் பீஸில் இந்த பேஸ்ட்டை தடவி, ஒரு மணிநேரம் நன்கு ஊற வைக்க வேண்டும்.
  • பிறகு ஒரு மணிநேரம் கழித்து உப்பு மற்றும் மிளகுத் தூளை சேர்த்து, பிரட்டி வைக்க வேண்டும்.
  • ஊறிய சிக்கன் துண்டுகளை கிரில் மிஸினில் வைத்து, நன்கு வேக வைத்து எடுக்க வேண்டும்.
  • இறுதியில் அதன் மேல் சாட் மசாலா மற்றும் எலுமிச்சை சாற்றை விட்டு, மீண்டும் 3 நிமிடம் கிரில் மிஸினில் வைத்து எடுக்க வேண்டும்.
  • இப்போது சூப்பரான தாங்ரி சிக்கன் கபாப் ரெடி!!!

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker