காதலன் – காதலி, கணவன் – மனைவி உறவு என்பது ஆழமான புரிதலில் தான் முழுமை அடைகிறது. இது இரண்டு தரப்புக்கும் பொருந்தும். ஒருவர் மற்றவரின் உணர்சிகளைப் புரிந்து அதற்கு ஏற்ப செயல்படும்போது அந்த புரிதல் அன்பாக மாறுகிறது.
கடினமான தருணங்களில் உங்கள் துணையின் உணர்வுகளைப் புரிந்துக் கொள்வதால் அந்த தருணத்தை எந்த ஒரு பாதிப்பும் இன்றி எளிதில் கடந்து வர முடியும். இல்லையேல் அந்த நாள் மற்றும் அந்த சம்பவம் ஒரு மறக்க முடியாத ரணமாக மாறும் வாய்ப்பு எழுகிறது.
கோபக்கார மனைவி உங்கள் மனைவி அல்லது காதலி கோபமாக இருக்கும்போது, அவரை மீண்டும் புன்னகைக்க வைக்கும் வழி தெரியாமல் இருக்கும் நபரா நீங்கள் ? உங்கள் அலைபேசி அழைப்பை அவர் ஏற்காமல் இருக்கலாம், உங்கள் குறுஞ்செய்திக்கு அவர் பதில் தராமல் இருக்கலாம். உங்களுக்கு ஒரு மௌன வைத்தியம் கொடுக்கலாம். எது எப்படி இருந்தாலும், உங்கள் சராசரி உறவில் ஒரு சிறு மாற்றத்தை ஏற்படுத்துவதால் உங்கள் உறவில் உள்ள இந்த ஊடலை உங்களால் எளிதில் கடந்து வர முடியும்.
சரியான கண்ணோட்டம் உங்கள் காதலி கோபமாக இருக்கிறார் என்ற ஒரே காரணத்திற்காக நீங்களும் அவர் மேல் கோபம் கொள்ள வேண்டாம். உணர்ச்சிகள் எப்போதும் மாறிக் கொண்டே இருக்கக் கூடியவை. மேலும் அவை வந்த வேகத்தில் மறையக் கூடியவை. நீங்கள் உங்கள் காதலியை சந்தோஷமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று அதற்கான முயற்சிகளை மேற்கொண்டாலும், இயல்பாகவே காலப்போக்கில் தானாகவே அவருடைய கோபம் தனியக்கூடும் என்பதையும் மனதில் கொள்ளுங்கள். ஒருவேளை நீங்கள் செய்த ஏதாவது ஒரு காரியத்தால் அவர் கோபம் கொண்டிருந்தால், உடனடியாக அவருடைய மனநிலையை லேசாக்க முயற்சி எடுங்கள்.
உணர்வுகளுக்கு அங்கீகாரம் கொடுங்கள் சில நேரங்களில் உங்கள் காதலியை அமைதிப்படுத்த அவர் உணர்வை இயல்பிற்கு கொண்டு வர, அவர் கூற விரும்புவதை காது கொடுத்து கேளுங்கள். “கேட்பதை விட அதிகமாக பேச விரும்பும் ஒரு நபர் அதிகம் கோபம் கொள்பவராக இருக்கிறார்”, என்று “How to Really Listen” என்ற பதிவில் பீட்டர் ப்ரேக்மான் PsychologyToday.com ல் கூறி இருக்கிறார். அவர் கூறுவது என்னவென்றால், “நீங்கள் பேசுவதை நிறுத்தி விட்டு, எப்போது கவனிக்கத் தொடங்குகிறீர்களோ அப்போது தான் உங்கள் துணையின் உணர்வை ஒப்புக் கொண்டு அங்கீகரிக்கத் தொடங்குகிறீர்கள் என்று அர்த்தம்” என்று கூறுகிறார். “ஒரு பிரச்சனையை அனுகுவதின் அடிப்படை, கவனிப்பது” என்று அவர் கூறுகிறார். ஒருவர் பேசுவதை மற்றொருவர் கேட்காமல் இரண்டு பெரும் பேசிக் கொண்டே இருப்பதால் நிலைமை மேலும் மோசமாகிறது என்று ப்ரேக்மான் கூறுகிறார். ஆகவே உங்கள் காதலி கூறுவதை ஒரு நிமிடம் நிதானமாகக் கேளுங்கள். அவர் கூறியது என்னவென்று அவரிடம் திரும்பக் கூறுங்கள். பிறகு அது குறித்த கேள்விகள் எழுப்புங்கள். மற்றும் அவர் கூறியது உங்களுக்கு விளங்கியது என்பதை அவருக்கு உணர்த்துங்கள்.
அவரைப் போல் நீங்களும் செய்யாதீர்கள் பொதுவாக ஒரு எதிர்மறை செயலுக்கு எதிர்மறை செயலை பதிலாக தராதீர்கள். அதாவது உங்கள் காதலி உங்கள் மேல் கோபம் கொண்டால், பதிலுக்கு நீங்களும் அவர் மேல் கோபம் கொள்ளாதீர்கள். உண்மையில், மனநிலை என்பது ஒரு தொற்றுநோயாகும், 2000ம் ஆண்டில் “ஆளுமை மற்றும் சமூக உளவியல்” என்ற பத்திரிகையில் தோன்றிய ஒரு ஆய்வறிக்கை இதனைத் தெரிவிக்கிறது. “மக்கள் மற்றவர்களின் மனநிலையை பிரதிபலிக்கின்றனர், எப்போதும் அல்ல, அவ்வப்போது” என்று எழுத்தாளர் ரோலண்டு ந்யுமன் மற்றும் பிரிட்ஸ் ஸ்ட்ரக் ஆகியோர் கூறுகின்றனர். எனவே, உங்கள் காதலி கோபம் கொண்டிருக்கும்போது, உங்களுக்கும் கோபம் வருவது இயல்பு தான். ஆனால், அவர் கோபமாக இருக்கும்போது நீங்களும் அதே முறையைக் கையாள்வதால் எதிர்மறை விளைவுகள் மட்டுமே மிஞ்சும். அதற்கு பதில், அமைதியாக, இருந்து அவர் கலக்கத்தைப் போக்குங்கள்.
தீர்வு காணுங்கள் உங்கள் காதலிக்கு வேறு ஏதாவது ஒரு காரணத்தால் ஒரு சிறு அழுத்தம் இருந்திருக்கலாம். அது அவருடைய கோபத்திற்கு காரணமாக இருக்கலாம். மக்களுக்கு எதிர்மறை மனநிலை ஏற்படுவதற்கு அன்றாட தொந்தரவுகள் சில காரணமாக இருக்கக்கூடும் என்று நைல் போல்கர் “ஆளுமை மற்றும் சமூக உளவியல்”என்ற பத்திரிகையில் நடத்திய ஒரு ஆய்வில் 1989ம் ஆண்டு குறிப்பிட்டுள்ளார். அதனால் உங்கள் காதலியின் பிரச்சனைகளைத் தீர்க்கும் ஒரு ஹீரோவாக நீங்கள் இருப்பதால் அவருடைய பிரச்சனைகள் தீர்க்கப்படுகிறது. உதாரணத்திற்கு அவருடைய பைக்கில் ஒரு சிறு பிரச்சனை என்றால் அதனை மெக்கானிக் கடையில் விட்டு சரி செய்து கொடுங்கள். சின்னச் சின்ன பிரச்சனைகளுக்கு தீர்வு கொடுப்பதால், நேர்மறை உணர்வுகள் எழுகிறது, இதனால் நன்றி உணர்ச்சி பெருகலாம். கோபம் குறையலாம்