ஆரோக்கியம்

நின்று கொண்டு உணவு உட்கொள்ளாதீர்கள்… மன அழுத்தம் உண்டாகும்!

அதனால் தான் எப்பொழுதும் அமர்ந்து நிதானமாக சாப்பிடுவதே ஆரோக்கியமானது என்று கூறப்படுகிறது. இது நிறைவான உணர்வை தருவதோடு கலோரிகளையும் எளிதாக எரிக்கும்.

நம் முன்னோர்கள் ஆரோக்கியமாய் வாழ முக்கிய காரணமாய் இருந்தது அவர்களின் உணவுமுறைதான். அவர்கள் சாப்பிட்ட சத்தான உணவுகள் மட்டுமின்றி உணவை அவர்கள் சாப்பிட்ட முறையும் அவர்களின் ஆரோக்கியத்திற்கு காரணமாய் இருந்தது. கடந்த தலைமுறை வரையே மக்கள் தரையில் சம்மணங்கால் போட்டு சாப்பிடுவதே பழக்கமாக இருந்தது. ஆனால் இப்பொழுது அவை அனைத்தும் மாறிவிட்டது.

அனைத்து வீடுகளிலும் இப்பொழுது டைனிங் டேபிள் வர தொடங்கிவிட்டது. பல உணவங்களில் நின்று கொண்டு சாப்பிடும் பழக்கமும் பரவ தொடங்கிவிட்டது. இது மட்டுமின்றி இப்பொது திருமணங்களிலும் பஃபே(buffet) விருந்து என்று நின்று கொண்டு சாப்பிடும் பழக்கம் உண்டாகிவிட்டது. இந்த நாகரிக வளர்ச்சியால் நாம் இழந்தது நமது கலாச்சாரத்தை மட்டுமல்ல விலைமதிப்பற்ற நமது ஆரோக்கியத்தையும்தான். இந்த பதிவில் நின்று கொண்டு சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள் என்னவென்று பார்க்கலாம்.

செரிமானக் கோளாறு

செரிமானக்கோளாறு சாப்பிடும்போது நீங்கள் இருக்கும் நிலை உங்கள் செரிமானத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. மருத்துவர்களின் கூற்றுப்படி நின்றுகொண்டு சாப்பிடும்போது உணவுகள் செரிமான மண்டலத்திற்குள் செல்லும் வேகம் அதிகரிக்கிறது. இதனால் அவை நுண்துகள்களாக உடைக்கப்படுவது தடுக்கப்படுகிறது. இது குடலில் அதிக அழுத்தத்தை உண்டாக்கி செரிமானத்தில் பிரச்சினையை உண்டாக்குகிறது.

அதிகமாக சாப்பிட தூண்டுதல்

அதிகமாக சாப்பிட தூண்டுதல் மேலே கூறியதன் தொடர்ச்சியாக நின்று கொண்டு சாப்பிடும்போது உணவு வேகமாக கீழே சென்று விடுவதால் நீங்கள் போதுமான அளவு சாப்பிட்டு விட்டீர்களா என்று உங்களுக்கே தெரியாது. இதன் விளைவாக நீங்கள் அதிகமாக சாப்பிட நேரிடும். அதனால் தான் எப்பொழுதும் அமர்ந்து நிதானமாக சாப்பிடுவதே ஆரோக்கியமானது என்று கூறப்படுகிறது. இது நிறைவான உணர்வை தருவதோடு கலோரிகளையும் எளிதாக எரிக்கும்.

பசி எடுத்தல் நீங்கள் பசியாக உணருகிறீர்களா இல்லையா என்பதை எளிதில் கண்டறியும் வழி உங்கள் வயிற்றில் எவ்வளவு உணவு உள்ளது என்பதை கண்டறிவதுதான். மருத்துவரீதியாக நின்று கொண்டு சாப்பிடுவது உணவு செரிப்பதை 30 சதவீதம் அதிகரிக்கிறது. இதனால் சாப்பிட்ட சில மணி நேரங்களிலேயே மீண்டும் உங்களுக்கு பசி எடுக்க தொடங்கிவிடும்.
வீக்கம் விரைவான செரிமானம் என்பது ஆபத்தானது.

ஏனெனில் உணவிலிருந்து முழுமையாக சத்துக்களை உறிஞ்சும் முன் உணவு செரித்து விடுவதால் மீதமுள்ள சத்துக்கள் வாயுவாகி உடலில் தங்கிவிடுகிறது. இது குடல் வீக்கத்தை ஏற்படுத்தும். குறிப்பாக கார்போஹைட்ரேட்டுகள் முழுமையாக செரிக்காத போது அது வீக்கத்தை ஏற்படுத்தும் என மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

உட்கார்ந்து சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள்

உட்கார்ந்து சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள் உட்கார்ந்து சாப்பிடுவதே ஆரோக்கியமான உணவு எனப்படும். தரையில் உட்கார்ந்து சாப்பிடுபவர்களுக்கு செரிமானம் சீராக இருக்கும், அதேசமயம் அதிகமாக சாப்பிடுதல், தவறான நேரங்களில் பசி எடுத்தல் போன்ற பிரச்சினைகள் வராது.

அதே நேரம் இந்த முறையிலான உணவு உணணும் பழக்கத்தினால் சிலர் மன உழைச்சலுக்கு ஆளாகின்றனர். நாம் “பதட்டம்” என்ற வார்த்தையை கேட்கும்போது, அது ஒரு சின்ன உடல் நலிவாக தெரிகிறது, ஆனால் அவற்றால் வருத்தப்படுபவர்களுக்கு, அது ஒரு பெரிய பிரச்சனை. வயதானவர்களின் சதவிகிதத்தை ஒப்பிட்டு நோக்கினால், அதிகமாக முப்பத்தைந்து வயதிற்கு குறைவான மக்கள் பதட்ட கோளாறுகளால் பாதிக்கப்படுகிறார்கள் என்று கண்டுபிடித்திருக்கிறார்கள்.

அந்தமாதிரியான நபர்களில், இந்த பிரச்சனை பொதுவாக சூழ்நிலை காரணமாகவும் மற்றும் எங்கு வேண்டுமானாலும் மேலும் எந்த நேரத்திலும் தூண்டுதலுக்கு உள்ளாகலாம். ஆனால் சில உணவுகள் இந்த பிரச்சனையை அதிகரிக்கும் என்று உங்களுக்குத் தெரியுமா? பதட்டத்தையும், மன அழுத்தம் அல்லது கவலை ஆகியவற்றை அதிகரிக்கின்றன.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker