ஆரோக்கியம்உறவுகள்சமையல் குறிப்புகள்புதியவை

வெங்காயம் இல்லாமல் வெங்காய சட்னி செய்வது எப்படி? சுவை அல்டிமேட்டாக இருக்கும்

பொதுவாக வீடுகளில் காலையுணவாக இட்லி, தோசை செய்வது தான் வழக்கம்.

இட்லி, தோசைக்கு என்ன சேர்த்து சாப்பிடுவது என்பது தான் பலரும் மனதில் காலையில் ஓடும் பெரிய பிரச்சனையாக இருக்கும்.

அப்படி பார்க்கும் பொழுது சட்னி அரைக்க வெங்காயம் இல்லாமல் இருந்தால் இன்னும் குழப்பமாக இருக்கும். அப்படி வீட்டில் வெங்காயம் இல்லாவிட்டால் அசல் வெங்காயம் சுவையில் சட்னி எப்படி அரைப்பது என்பதனை தெரிந்திருப்பது அவசியம்.

அந்த வகையில், வெங்காயம் இல்லாமல் அதே சுவையில் எப்படி வெங்காய சட்னி அரைப்பது என்பதனை பதிவில் பார்க்கலாம்.

வெங்காயம் இல்லாமல் வெங்காய சட்னி செய்வது எப்படி? சுவை அல்டிமேட்டாக இருக்கும் | Onion Chutney Without Onion Recipe In Tamil

தேவையான பொருட்கள்

  • சிவப்பு மிளகாய் (உருண்டை வகை) – 4–5
  • பூண்டு (பீல்ஸ் எடுத்தது) – 5 பற்கள்
  • தக்காளி – 1 (நன்றாக பழுத்தது)
  • சின்ன வெந்தயத்தை அளவிற்கு – ¼ டீஸ்பூன்
  • உருளைக்கிழங்கு – 1 (நன்றாக வேக வைத்து தோல் சீவி வைக்கவும்)
  • உப்பு – தேவையான அளவு
  • எண்ணெய் – 1 டேபிள்ஸ்பூன்
தாளிக்க தேவையான பொருட்கள்
  • கடுகு – ½ டீஸ்பூன்
  • உளுத்தம்பருப்பு – ½ டீஸ்பூன்
  • கறிவேப்பிலை – சிறிது
  • எண்ணெய் – 1 டீஸ்பூன்

செய்முறை

முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் ஊற்றவும். அதனுடன் மிளகாய், பூண்டு, வெந்தயம், தக்காளி ஆகிய பொருட்களை போட்டு வறுக்கவும்.

வெங்காயம் இல்லாமல் வெங்காய சட்னி செய்வது எப்படி? சுவை அல்டிமேட்டாக இருக்கும் | Onion Chutney Without Onion Recipe In Tamil

அதன் பின்னர், நன்றாக வதங்க விட்டு தனியாக வைத்து கொள்ளவும். வெங்காயம் இல்லாத காரணத்தினால் உருளை கிழங்கு வேக வைத்து சேர்க்கலாம். அப்படியாயின், வேக வைத்த உருளைக்கிழங்கைச் சேர்த்துப் பின்னர் சுத்தமாக கழுவிய மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து கொள்ளவும்.

அதே கடாயில் மீண்டும் கொஞ்சமாக எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்து சட்னியில் ஊற்றி இறக்கினால் சுவையான வெங்காயச் சட்னி வெங்காயம் இல்லாமல் தயார்!

வெங்காயம் இல்லாமல் வெங்காய சட்னி செய்வது எப்படி? சுவை அல்டிமேட்டாக இருக்கும் | Onion Chutney Without Onion Recipe In Tamil

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker