உங்கள் குணத்திற்கு ஏற்ற தொழிலைத் தேர்ந்தெடுக்க கைரேகை உதவுகிறது. நீங்கள் படித்து முடித்தவுடன் எந்த தொழிலை செய்வது என்ற குழப்பத்தில் இருக்கிறீர்களா? உங்கள் குழப்பத்தைப் போக்க கைரேகை உதவுகிறது. உங்கள் கைகளில் உள்ள ரேகைகள் மற்றும் குறிகள் நீங்கள் எந்த தொழிலைத் தேர்ந்தெடுத்தால் வெற்றி பெறுவீர்கள் என்பதை உங்களுக்கு உணர்த்துகிறது. நம் கைரேகை நிபுணர்கள் உங்கள் குணநலனுக்கு ஏற்ற தொழிலை தேர்ந்தெடுக்க உங்களுக்கு உதவுகின்றனர். வாருங்கள் தொடர்ந்து படித்து தெரிந்து கொள்வோம்.
கை ரேகை உங்கள் கைகளின் தன்மை மற்றும் கைரேகைகள் மூலம் உங்கள் குணநலனுக்கு ஏற்ற தொழிலை கண்டுபிடிக்கலாம் என்று கைரேகை சாஸ்திரம் கூறுகிறது. இதன்படி தொழில் அமைப்பவர்கள் வாழ்க்கை வெற்றிகரமாக அமைகிறது என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை. ஆகவே உங்கள் உள்ளங்கையில் உள்ள ரேகைகளை பார்த்து உங்கள் தொழிலை தேர்ந்தெடுக்க உன்னிப்பாகத் தெரிந்து கொள்ளுங்கள்.
முடிச்சு விரல்கள் (Knotty Fingers) இந்த வகையான விரல்களைக் கொண்ட நபர்கள் எதையும் உடனடியாக ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என நம்பப்படுகிறது. இந்த நபர்கள் சிறந்த கட்டடக் கலைஞர்கள், அறிஞர்கள், ஆசிரியர்கள், எழுத்தாளர்கள், துப்பறிவாளர்கள், புராஜக்ட் மேனேஜர், மேலாளர்கள் மற்றும் கிராஃபிக் வடிவமைப்பாளர்கள் போன்ற துறையை தேர்ந்தெடுக்கலாம்.
வெள்ளி ரேகை இந்த வெள்ளி ரேகை வலிமையாக உள்ளவர்கள், நகைச்சுவை உணர்வோடு இருப்பார்கள். இவர்களின் கணக்கீடு திறன் இவர்களை கூட்டத்தில் இருந்து தனித்து நிற்க வைக்கும். இந்த நபர்களுக்கு சிறந்த பொருத்தமாக இருக்கும் தொழில்கள் பெரும்பாலும் கணக்கீடுகள், கணிதம், விஞ்ஞானம், தொடர்பு மற்றும் சட்டம் ஆகியவற்றை உள்ளடக்கியிருக்கின்றன.
விரல்களின் அளவு சுட்டு விரல் மற்றும் நடுவிரல் ஆகிய இரண்டும் நீளமாக இருந்தால் அவர்கள் மிகப்பெரிய வக்கீலாக வரலாம். நீளமான உள்ளங்கை மற்றும் நீளமான விரல்கள் கொண்டு, புதன் மேடு வலிமையாக இருந்தால் கணக்கு பிரிவில் தலை சிறந்து விளங்குவார்கள்.
சந்திர மேடு நீளமான ஆட்காட்டி விரலுடன் சந்திர மேடு வலிமையாக உள்ளவர்கள், ஆசிரியர் பணியில் சிறந்து விளங்குவர். அவர்கள் வழிகாட்டிகளாகவோ, நேவிகேட்டர்களாகவோ இருக்கலாம்.
சனி மேடு மிகச் சிறிய தகவலிலும் உன்னிப்பாக கவனம் செலுத்துபவர்கள் சனி மேடு வலிமையாக இருப்பவர்கள். இவர்களுக்கு ஆராய்ச்சித் துறை சிறப்பானதாக இருக்கும். பொறியியல் அல்லது மருத்துவ அறுவை சிகிச்சை போன்ற துறையிலும் சிறப்பாக இயங்க முடியும், மேலும் கைரேகை பற்றி சுவாரஸ்யமான தகவல்களைப் பெற தொடர்ந்து எங்களுடன் தொடர்பில் இருங்கள்.