சமையல் குறிப்புகள்
புரதம் நிறைந்த கிரீன் தோசை
நாள் முழுவதும் புத்துணர்ச்சியுடன் இருக்க புரதம் நிறைந்த கிரீன் தோசையை காலையில் சாப்பிடலாம். இன்று இந்த தோசையை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
- பச்சைப்பயறு – 1 கப்
- சின்ன வெங்காயம் – 5
- காய்ந்த மிளகாய் – 2
- பூண்டு – 2
- சீரகம் – 1 டீஸ்பூன்
- முந்திரி – 3
- உப்பு – சிறிதளவு
செய்முறை :
- பச்சைப்பயறை இரவே நன்றாக கழுவி தண்ணீரில் ஊறவைத்து கொள்ள வேண்டும்.
- காலையில் ஊறவைத்த பச்சைப்பயறை மிக்ஸியில் போட்டு அதனுடன் சின்ன வெங்காயம், காய்ந்த மிளகாய், பூண்டு, சீரகம், முந்திரி, சிறிது உப்பு சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும்.
- தோசை மாவு பதத்துக்கு மாவை கரைத்துக்கொள்ளவும்.
- தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை தோசைகளாக ஊற்றி இருபுறமும் எண்ணெய் விட்டு சுட்டு எடுக்கவும்.
- சத்தான கிரீன் தோசை ரெடி.
- தக்காளி சட்னி, வெங்காய சட்னிக்கு தொட்டு சாப்பிட பொருத்தமாக இருக்கும்.