சமையல் குறிப்புகள்

மாலை நேர ஸ்நாக்ஸ் முட்டை பஜ்ஜி

மாலையில் பள்ளியில் இருந்து வரும் குழந்தைகளுக்கு முட்டை பஜ்ஜி செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். இன்று இந்த பஜ்ஜியை செயவ்து எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

  • முட்டை – 6
  • கடலை மாவு – 100 கிராம்
  • மிளகாய்தூள் – 2 டீஸ்பூன்
  • சமையல் சோடா – சிறிதளவு
  • எண்ணெய் – தேவையான அளவு
  • உப்பு – தேவையான அளவு

செய்முறை:

  • முட்டைகளை வேகவைத்துகொள்ளவும். பிறகு உடைத்து, அதனை இரண்டு துண்டு களாக வெட்டிக்கொள்ளவும்.
  • அகன்ற பாத்திரத்தில் கடலை மாவை கொட்டி அதனுடன் சமையல் சோடா, மிளகாய்தூள், உப்பு சேர்த்து தோசை மாவு பதத்துக்கு கரைத்துக்கொள்ளவும்.
  • கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் மாவு கலவையில் முட்டை துண்டுகளை முக்கி எடுத்து சூடான எண்ணெயில் பொரிக்கவும். பொன்னிறமாக மாறியதும் எடுத்து சுவைக்கலாம்.
  • சூப்பரான முட்டை பஜ்ஜி ரெடி.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker