சமையல் குறிப்புகள்

குளிர்ச்சி தரும் தர்பூசணி ஆரஞ்சு ஜூஸ்

தர்பூசணி கோடையில் உடலை குளிர்விக்க மிக மிக அவசியமானது. இன்று தர்பூசணியுடன் ஆரஞ்சு பழச்சாறு சேர்த்து ஜூஸ் செய்து எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

  • தர்பூசணி துண்டுகள் – 2 கப்
  • ஆரஞ்சு – 2
  • உப்பு – 1 சிட்டிகை
  • தேன் – 2 டீஸ்பூன்
  • ஆப்பிள் – பாதி
  • ஐஸ்கட்டிகள் – சிறிதளவு

அலங்கரிக்க :

  • ஆப்பிள் துண்டுகள் – 1 டீஸ்பூன்
  • புதினா இலைகள் – 3

செய்முறை :

  • ஆரஞ்சு பழத்திலிருந்து சாறு எடுத்து தனியாக வைக்கவும்.
  • ஆப்பிளை தோல் நீக்கி பொடியாக நறுக்கி கொள்ளவும்.
  • அனைத்தையும் மிக்ஸி ஜாரில் எடுத்துக்கொள்ளவும்.
  • தர்பூசணியில் உள்ள விதைகளை எடுத்து விட்டு துண்டுகளாக எடுத்து வைக்கவும்.
  • மிக்சியில் தர்பூசணி, ஆரஞ்சு சாறு, உப்பு, தேன், ஆப்பிள், ஐஸ்கட்டிகள் போட்டு நன்றாக அடிக்கவும்.
  • அரைத்த ஜூஸை கண்ணாடி கோப்பையில் ஊற்றி பொடியாக நறுக்கிய ஆப்பிள் துண்டுகளையும் புதினா இலைகளையும் போட்டு பருகவும்.
  • சத்தான தர்பூசணி ஆரஞ்சு ஜூஸ் ரெடி.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker