அற்புதமான வாழ்க்கைக்கு தினம் 5 நிமிடம் யோகாசனம் போதும்!
காலை வேளையில் மற்ற யோகாசனங்களுடன் செய்ய வேண்டிய யோகா நிலையாகும்
தினமும் 5 நிமிடம் யோகாசனம் செய்தால் போதும், அற்புதமான வாழ்க்கையை நாம் அமைத்து கொள்ள முடியும்!
“அது எப்படி சாத்தியமாகும்?” என்று நீங்கள் யோசிக்கலாம். 5 நிமிட பயிற்சியை தினமும் செய்து பார்த்தால்தான் அதன் தாக்கத்தை நாம் முழுமையாக உணர முடியும்.
யோகா என்பது பல கோணங்களில் உடலை சுருக்கி மனதையும் ஒருமுகப்படுத்தி செய்யும் பயிற்சி. இந்த பயிற்சியால் மனதையும் உடலையும் இணைத்து நீடித்த ஆரோக்கியத்தை பெறலாம்.
யோகாவை முறையாக பயிற்சி செய்தால் இரத்த அழுத்தம் சீராகும், மன அழுத்தம் குறையும், உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புத் தன்மையை நீங்கும்.
அழகிய உடல் அமைப்பை பெறவும் ஆரோக்கியமாக இருக்கவும் சீரான எடையை பேணவும் யோக நமக்கு வழிகாட்டி வருகின்றது. மூளையையும், உடல் ஆரோக்கியத்தையும் பலப்படுத்தும் யோகா மூளையின் உட்பிரிவு சம்பந்தமான பிரச்சினைகளையும் சரிசெய்கின்றது.
கண்களுக்கு யோகா பயிற்சி
வேலை பளு காரணமாக கண்களில் எரிச்சல், வலி போன்ற பிரச்சனைகளால் அவதிப்படுபவர்களுக்கான யோகா பயிற்சியை இப்போது பார்க்கலாம்.
நிமிர்ந்து நேராக உட்கார வேண்டும். வலது கையில் கட்டை விரலைத் தவிர மற்ற விரல்களை மடக்கி, பார்வைக்கு நேராக உயர்த்தி, கட்டைவிரலைப் பார்க்க வேண்டும். நம் பார்வை, கட்டை விரலில் நிலைத்திருக்க வேண்டும். கையை மெதுவாக வலப்புறம் நகர்த்த வேண்டும்.
கையை நகர்த்தும்போது, விழிகள் மட்டும் கையோடு சேர்ந்து நகர வேண்டும். தலையைத் திருப்பக் கூடாது. கழுத்து, முதுகு, நேராக இருப்பது அவசியம். கட்டை விரலைத் தெளிவாகப் பார்க்கக்கூடிய தூரம் வரை மட்டுமே கையை நகர்த்தவும். சிறிது நேரம் அப்படியே வைத்திருக்கவும். பிறகு, கையை அப்படியே பழைய நிலைக்குக் கொண்டுவரவும். இதை, ஐந்து முறை செய்ய வேண்டும். பயிற்சி செய்யும்போது, கண்களைச் சிமிட்டக் கூடாது. இதேபோல கை பெருவிரலை இடது பக்கம் நகர்த்தி செய்ய வேண்டும்.
நேராக உட்கார்ந்து, மூக்கின் நுனியை உற்று நோக்கவும். கண்களோ, தலையோ வலிப்பது போன்று இருந்தால், கொஞ்சம் ஓய்வு எடுத்துவிட்டுத் தொடரலாம். பிறகு, கண்களை மூடி ஓய்வெடுக்கவும்.
நிமிர்ந்து உட்கார்ந்து கண்களை 10 முதல் 20 முறை சிமிட்டவும். பிறகு, கண்களைத் திறந்து நேராகப் பார்க்கவும். இடது கண் விழியை வலது பக்கமும், வலது கண் விழியை இடது பக்கமும் கொண்டுவந்து பயிற்சி செய்யவும். அதன் பிறகு, கைகளை தேய்த்து கண்களில் வைத்துக்கொள்ளவும். மீண்டும் 10- 20 முறை கண்களைச் சிமிட்டவும்.
2)
கழுத்தில் ஏற்படும் வலியினைக் களைய, ஏழு எளிய ஆசனங்களை உங்களுக்குத் தருகின்றோம். அவை செய்வதற்கு சுலபமானவை. உங்களது நேரத்தையும் அதிகம் எடுத்துக் கொள்ளாது.யோகாவின் சிறப்பு என்ன வென்றால் அது 5000 ஆண்டுகளாக இருக்கின்றது, இன்றும் சிறப்பாகவே இருந்து வருகின்றது.
1. பாலாசனா சிசு நிலை: (i) தரையில் மண்டியிட்டு அமர்ந்து கொள்ளவும். முழங்காலுக்குக் கீழும், கணுக் காலுக்கு மேலும் உள்ள காலின் முன் பகுதி தரையில் இருக்கட்டும். கால் கட்டை விரல்கள் இரண்டும் ஒன்றையொன்று தொட்டுக் கொண்டு இருக்கட்டும்.குதி கால்களின் மீது அமருங்கள்.
கைகள் இரண்டும் பக்க வாட்டிலேயே இருக்கட்டும். மூச்சினை வெளியே விட்டு, தலை நீக்கிய மீதம் உள்ள உடற் பகுதியை உங்கள் தொடைகளுக்கிடையே மெதுவாகக் கொண்டு வாருங்கள். உங்கள் தலை மெதுவாகத் தரையைத் தொடட்டும். உங்கள் கைகள் இரண்டும் பக்க வாட்டில், உள்ளங்கைகள் வானத்தைப் பார்த்தபடி இருக்கட்டும். இந்த நிலையில் எவ்வளவு நேரம் முடியுமோ அவ்வளவு நேரம் நிலைத்திருங்கள்.மூச்சினை உள்ளே இழுத்து, மீண்டும் அமர்ந்த நிலைக்கு வாருங்கள்.
(ii) உங்கள் கைகள் இரண்டினையும் தொடைகளின் மீது வைத்து, முழந்தாளிட்டே அமர்ந் திருங்கள். இந்தத் தோற்றம், கழுத்து வலியினை போக்குவது மட்டுமல்லாது உங்களது மூளையையும் அமைதிப் படுத்துகின்றது.இடுப்பு, தொடைகள், கணுக் கால்கள், ஆகியவற்றை நீட்டி, உங்களைக் குழந்தையைப் போன்று புத்துணர்ச்சி யுடன் இருக்க வைக்கின்றது.
சேது பந்தாசனா (Sethu Bandasana)
தரையில் படுத்து பின்னர் உடலை மேலெழுப்பி கைகளை கீழாக கோர்த்துக்கொள்ள வேண்டும் .
குறிப்பு : கழுத்து வலி உள்ளவர்கள் இதனை செய்தல் கூடாது. கர்ப்பிணி பெண்கள் முழுவதுமாக இதனை செய்ய வேண்டாம். உங்களுக்கு முதுகு வலி இருந்தால் இதனை தவிர்ப்பது நல்லது.
பலன்கள் .உஸ்டிராசனாவை போலவே இதுவும் ரத்தத்தை ஓட்டத்தை அதிகப்படுத்துகிறது. இது முதுகு தண்டு மற்றும் இதயத்திற்கு பலம் சேர்க்கிறது. இதனை நிலையின் மூலம் எப்பொழுதும் சுறுசுறுப்பாக திகழ்வீர்கள்
உஸ்ட்ராசனா (Ustrasana)
மண்டியிட்டு பின்னர் பின்பக்கம் வழியாக கைகளால் பாதங்களை தொடுவதாகும் . இது காலை வேளையில் மற்ற யோகாசனங்களுடன் செய்ய வேண்டிய யோகா நிலையாகும். இதனை வெறும் வயிற்றில் செய்ய வேண்டும்.
குறிப்பு : குறைந்த மற்றும் உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் இதனை தவிர்ப்பது நல்லது
பலன்கள் : உஸ்டிராசனா செய்யும் பொழுது ரத்த ஓட்டம் சீராகிறது. அதாவது அதிகப்படியான ஆக்ஸிஜன் உடலில் உள்ள அழுத்தத்தை சரி செய்து உடலையும் மனதையும் ரிலாக்ஸாக வைக்க உதவுகிறது.
பாஸ்ச்சிமொட்டனாசனா (Paschimottanasana)
முறை : கால்களை நீட்டி பின்னர் முன்னோக்கி மடங்கி கைகளால் கால்களை தொடுதல் இந்த ஆசனத்தை செய்யும் பொழுது வெறும் வயிற்றில் தான் செய்ய வேண்டும். நான்கு ஆறு மணி நேரத்திற்கு முன்பு உணவு அருந்தி இருக்க வேண்டும். அப்பொழுதுதான் உடலுக்கு தேவையான ஆற்றல் கிடைக்கும். இதனை காலை வேளைகளில் செய்வது நல்ல பலன் தரும். காலை வேளைகளில் முடியாதவர்கள் மாலை வேளைகளில் இதனை செய்யலாம்.
ஆஸ்துமா, வயிற்றுப்போக்கு இருப்பவர்கள் இந்த ஆசனத்தை செய்ய கூடாது. கர்ப்பிணி பெண்கள் இதனை தவிர்க்க வேண்டும், முதுகு வலி இருப்பவர்கள் தாமாக செய்வது ஏதேனும் விளைவினை உண்டாகலாம். எனவே தகுதியான யோகா ஆசிரியரை வைத்து செய்து நல்லது.
பலன்கள்: இந்த முன்னோக்கிய நிலையானது கால்களின் பின்பகுதி மற்றும் முதுகெலும்பு போன்றவற்றிக்கு உதவுகிறது. இந்த நிலையில் ஆழமாக மூச்சை இழுத்து விடும்போது ரிலாக்ஸாக உணர்வீர்கள் . உணவு செரிமானத்திற்கு உதவும்.