சமையல் குறிப்புகள்

உடலுக்கு குளிர்ச்சி தரும் கேழ்வரகு மிளகு தோசை

கோடை காலத்தில் கேழ்வரகை அதிகளவு சேர்த்து கொள்வது உடல் சூட்டை தணிக்க உதவும். இன்று கேழ்வரகு, மிளகு சேர்த்து தோசை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

  • கேழ்வரகு மாவு – 1/2 கப்
  • கோதுமை மாவு – 1/4 கப்
  • வெங்காயம் – 1
  • பச்சை மிளகாய் – 1
  • கறிவேப்பிலை – சிறிது
  • சீரகம் – 1 டீஸ்பூன்
  • உப்பு – தேவையான அளவு
  • தண்ணீர் அல்லது மோர் – தேவையான அளவு

செய்முறை :

  • ப.மிளகாய், வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
  • ஒரு பாத்திரத்தில் கேழ்வரகு மாவு, கோதுமை மாவு, வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, சீரகம் மற்றும் உப்பு சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் அல்லது மோர் சேர்த்து நன்கு தோசை மாவு பதத்திற்கு கலந்து கொள்ள வேண்டும்.
  • தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, சூடானதும், அதில் எண்ணெய் தடவி, பின் கலந்து வைத்துள்ள மாவை தோசைகளாக ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு எடுத்து பரிமாறவும்.
  • சத்தான சுவையான கேழ்வரகு மிளகு தோசை ரெடி!!!

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker