உலக நடப்புகள்புதியவை

பல்லி உங்கள் எதிர்காலத்தை எப்படி முன்கூட்டியே சொல்கிறது தெரியுமா? ஜாக்கிரதையா இருங்க…!

பல்லி விழும் பலன்கள் பார்ப்பது நமது சாஸ்திரங்களில் மிகவும் முக்கியமானதாகும். இந்த பதிவில் பல்லி உங்கள் விதியை எப்படி தீர்மானிக்கிறது என்று பார்க்கலாம்.

பல்லி தலையில் விழுந்தால்

பல்லி உங்கள் தலையில் விழுந்தால் நீங்கள் கடவுளை வேண்டுவதை தவிர வேறு வழியில்லை. ஏனெனில் இது மிகவும் அபசகுணமான ஒன்றாகும். இவ்வாறு விழுவது துர்மரணத்தின் அறிகுறியாக கருதப்படுகிறது.

வலது கண்ணை தொட்டால்

பல்லி உங்கள் வலது கண்ணை தொடுவது என்பது அதிக பயத்தை தரக்கூடிய ஒன்றாகும். ஆனால் இது நல்லதிற்கான அறிகுறிதான். அந்த தருணத்தை நினைத்து பயப்படாமல் எதிர்காலத்தை நினைத்து ஆவல் கொள்ளுங்கள். மகிழ்ச்சி உங்களுக்கு அனைத்து மூலைகளிலும் காத்திருக்கிறது.

இடது கண்ணை தொட்டால்

வலது கண்ணிற்கும், இடது கண்ணிற்கும் என்ன பெரிய வித்தியாசம் என்று நீங்கள் ஆச்சரியப்படலாம். ஆனால் பல்லி ஏன் உங்கள் இடத்தி கண்ணை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று சிந்தித்து பாருங்கள். உங்கள் இடது கண்ணை தொட்டால் உங்களுக்கு அதிக செல்வமும், அதிக மகிழ்ச்சியும் காத்திருக்கிறது என்று அர்த்தம்.

வலது மணிக்கட்டில் விழுந்தால்

இது பல்லி அடிக்கடி நம் மேலே விழும் ஒரு இடமாகும். ஏனெனில் நாம் பெரும்பாலும் நமது வலதுகையைத்தான் அனைத்தையும் திறக்க பயன்படுத்துவோம். அதனால் பல்லி நமது வலது கையில் விழ அதிகம் வாய்ப்புள்ளது. இது ஒரு கெட்ட சகுனமாகும்.

இடது மணிக்கட்டு

இடது மணிக்கட்டு வலது மாணிக்கட்டிற்கு நேர் எதிரானதாகும். ஏனெனில் இது நல்ல சகுனம். ஆனால் இடது கை பழக்கமுள்ளவர்களுக்கு இது பொருந்தாது.

நகத்தை தொட்டால்

பல்லி உங்கள் நகத்தை தொட நேர்ந்தால் நீங்கள் சில நஷ்டங்களை சந்திக்க போகிறீர்கள் என்று அர்த்தம். அதனை உங்களால் தவிர்க்கவும் இயலாது, அதற்கு தயாராய் இருந்து கொள்ள மட்டுமே முடியும்.

நெற்றி மீது விழுந்தால்

பல்லி தலையில் விழுவதற்கும் நெற்றி மீது விழுவதற்கும் நிறைய வித்தியாசம் உள்ளது. ஏனெனில் இதனை நினைத்து நீங்கள் பயப்பட வேண்டாம். இது கடவுளின் ஆசீர்வாதமாகும்.

தோள்பட்டை

உங்களின் வலது தோள்பட்டை மீது பல்லி விழுந்தால் நீங்கள் இறங்கும் காரியத்தில் வெற்றி உங்களுடையதாகும். அதுவே இடது தோள்பட்டையில் விழுந்தால் குறுகிய காலத்திலேயே உங்கள் வாழ்க்கையில் அமைதியையும், மகிழ்ச்சியையும் அடைவீர்கள்.

பாதங்கள்

உங்கள் பாதங்களின் மீது பல்லி விழுவது மிகவும் கெட்ட சகுனமாகும். ஏனெனில் உங்கள் வலது பாதத்தில் பல்லி விழுந்தால் உங்களுக்கு அணைத்து திசைகளில் இருந்தும் கெட்டது நடக்கப்போகிறது என்று அர்த்தம். அதுவே இடது பாதத்தில் விழுந்தால் உங்களின் வாழ்க்கை மோசமான பாதையில் திரும்ப போகிறது என்று அர்த்தம். தொடை மீது விழுந்தால் உங்களுக்காக பல சோதனைகள் காத்திருக்கிறது என்று அர்த்தம்.

விரல்கள்

ஒருவேளை உங்கள் இடது கை விரல்கள் மீது பல்லி விழுந்தால் உங்களை நோக்கி பல துன்பங்கள் வரப்போகிறது என்று அர்த்தம். உங்கள் வாழ்க்கையை இருள் மேகம் சூழப்போகிறது எச்சரிக்கையாய் இருங்கள். வலது கை விரல்கள் மீது விழுந்தால் பிடித்தவர்களிடம் இருந்து பரிசை வாங்க தயாராக இருங்கள்.

கழுத்து

உங்கள் கழுத்தின் இடது புறத்தில் பல்லி விழுந்தால் பல்வேறு சவால்களில் வெற்றி உங்களுக்காக காத்திருக்கிறது என்று அர்த்தம். கழுத்தின் வலது புறம் விழுந்தால் உங்களுக்கு புதிய எதிரிகள் வரப்போகிறார்கள் என்று அர்த்தம்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker