சமையல் குறிப்புகள்

சூப்பரான ஸ்நாக்ஸ் அவல் போண்டா

தேவையான பொருட்கள் :

  • தட்டை அவல் – ஒரு கப்,
  • உருளைக்கிழங்கு – ஒன்று,
  • பச்சை மிளகாய் – 3,
  • கொத்தமல்லி – ஒரு கைப்பிடி அளவு,
  • தயிர் – 2 டேபிள்ஸ்பூன்,
  • எண்ணெய் – பொரிக்க தேவையான அளவு,
  • உப்பு, சீரகம், பெருங்காயத்தூள் – தேவையான அளவு.

செய்முறை :

  • அவலை நன்றாக கழுவி ஊறவைக்கவும்.
  • உருளைக்கிழங்கை வேக வைத்து மசித்து கொள்ளவும்.
  • ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
  • ஒரு பாத்திரத்தில் ஊறவைத்த அவலை தண்ணீரை நன்றாக வடித்து போட்டு அதனுடன் வேக வைத்த உருளைக்கிழங்கு, ப.மிளகாய், கொத்தமல்லி, உப்பு, தயிர், சீரகம், பெருங்காயத்தூள் சேர்த்து, தண்ணீர் தெளித்து, நன்கு பிரைந்து கொள்ளவும்.
  • இந்த மாவை போண்டா சைஸில் உருண்டைகளாக பிடித்து வைக்கவும்.
  • கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் உருட்டி வைத்த உருண்டைகளை போட்டு மிதமான சூட்டில், அதிகம் சிவந்து விடாமல் பொரித்தெடுக்கவும்.
  • சூப்பரான அவல் போண்டா ரெடி

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker