சமையல் குறிப்புகள்

சிவப்பு கோஸ் கேரட் சாலட்

காலையில் சாலட் சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. அந்த வகையில் இன்று சிவப்பு முட்டைகோஸ், கேரட் வைத்து சாலட் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

  • சிவப்பு கோஸ் – 1000 கிராம்
  • கேரட் – 2
  • பூண்டு – 2 பல்
  • ஆலிவ் ஆயில் – 2 டீஸ்பூன்
  • எலுமிச்சை சாறு – 3 டீஸ்பூன்
  • மிளகு தூள் – தேவையான அளவு
  • உப்பு – தேவையான அளவு.

செய்முறை :

  • பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
  • சிவப்பு முட்டை கோஸை மெலிதாக நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும்.
  • கேரட்டை துருவிக்கொள்ளவும்.
  • ஒரு பாத்திரத்தில் மெலிதாக நறுக்கிய சிவப்பு முட்டை கோஸ், துருவிய கேரட்டை போட்டு அதனுடன் பூண்டு, ஆலிவ் ஆயில், எலுமிச்சை சாறு, மிளகு தூள், உப்பு சேர்த்து நன்றாக கலந்து பரிமாறவும்.
  • சூப்பரான சிவப்பு கோஸ் கேரட் சாலட் ரெடி.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker