சமையல் குறிப்புகள்
சிவப்பு கோஸ் கேரட் சாலட்
காலையில் சாலட் சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. அந்த வகையில் இன்று சிவப்பு முட்டைகோஸ், கேரட் வைத்து சாலட் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
- சிவப்பு கோஸ் – 1000 கிராம்
- கேரட் – 2
- பூண்டு – 2 பல்
- ஆலிவ் ஆயில் – 2 டீஸ்பூன்
- எலுமிச்சை சாறு – 3 டீஸ்பூன்
- மிளகு தூள் – தேவையான அளவு
- உப்பு – தேவையான அளவு.
செய்முறை :
- பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
- சிவப்பு முட்டை கோஸை மெலிதாக நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும்.
- கேரட்டை துருவிக்கொள்ளவும்.
- ஒரு பாத்திரத்தில் மெலிதாக நறுக்கிய சிவப்பு முட்டை கோஸ், துருவிய கேரட்டை போட்டு அதனுடன் பூண்டு, ஆலிவ் ஆயில், எலுமிச்சை சாறு, மிளகு தூள், உப்பு சேர்த்து நன்றாக கலந்து பரிமாறவும்.
- சூப்பரான சிவப்பு கோஸ் கேரட் சாலட் ரெடி.