எடிட்டர் சாய்ஸ்

பெண்களை பலவீனப்படுத்தும் பயமும்.. கவலையும்..

பலவிதமாக புலம்பும் பெண்களின் எண்ணிக்கை சமீபகாலங்களில் அதிகரித்துக்கொண்டிருக்கிறது. பயமும், கவலையும் இன்றைய பெண்களை ஆட்டிப்படைக்க என்ன காரணம்? என்று பார்க்கலாம்.

பெண்களை பலவீனப்படுத்தும் பயமும்.. கவலையும்..

– ‘சாதாரண விஷயத்திற்குகூட எனக்கு கோபம் வந்து விடுகிறது. பற்களை இறுக்கமாக கடித்துக்கொண்டு காட்டுத்தனமாக கத்துகிறேன். சிறிது நேரம் கழித்து நான் இயல்பு நிலைக்கு திரும்பிய பிறகு, ராட்சஷி போல் நடந்துகொண்டிருக்கிறேனே என்று குற்ற உணர்வு கொள்கிறேன்’

– ‘உல்லாச பயணங்கள், விருந்து, விழாக்களில் கலந்துகொள்ளக்கூட எனக்கு விருப்பம் இல்லை. அப்படிப்பட்ட நேரங்களில் தலைவலி, உடல்வலி, சோர்வு, மனஅழுத்தம் போன்றவை ஏற்படுகிறது’

– ‘எப்போதும் ஏதோ ஒருவித கவலைவாட்டுகிறது. நாம் எதற்கும் லாயக்கற்றவர் ஆகிவிட்டோமோ என்ற எண்ணம் அவ்வப்போது தோன்றுகிறது. மிக நெருக்கமானவர்களிடம் கூட பேச்சை குறைத்துக்கொள்கிறேன்’.

…இப்படி பலவிதமாக புலம்பும் பெண்களின் எண்ணிக்கை சமீபகாலங்களில் அதிகரித்துக்கொண்டிருக்கிறது. அவர்களில் பெரும்பாலானவர்கள் அலுவலகங்களில் வேலைபார்ப்பவர்கள். அலுவலக வேலை- வீட்டு நிர்வாகம் ஆகிய இரண்டிலும் கவனம் செலுத்தி பரபரப்பாக இயங்குகிறவர்கள். இவர்கள் பெரும்பாலும் 40 வயதைக் கடந்தவர்களாகவும் இருக்கிறார்கள்.

பயமும், கவலையும் இன்றைய பெண்களை ஆட்டிப்படைக்க என்ன காரணம்?

வீட்டு வேலைகள்-அலுவலகப் பணிகள் என்று பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கும் பெண்களில் பெரும்பாலானவர்கள் அதிகாலை ஐந்து மணி முதல் இரவு 11 மணி வரை இயந்திரங்கள் போல் செயல்படுகிறார்கள். இந்த 18 மணி நேர பரபரப்பில் அவர்கள் குடும்பத்திற்கு உள்ளேயும், வெளியேயும் முக்கியமான நபர்கள் சிலரையாவது சந்திக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் அவர்களிடம் நின்று பேசுவதில்லை. சிரித்து மகிழ்வதில்லை. கண்டுங்காணாமலே சென்று விடுகிறார்கள். ஏன்என்றால், ‘அவர்களிடம் பேசினால் புதிதாக வேறு ஏதாவது பிரச்சினை உருவாகிவிடும். சும்மா போகிற ஓணானை பிடித்து இடுப்பில் கட்டிக்கொண்ட கதையாகிவிடும்’ என பயந்து உறவுகளிடம் பேசுவதற்கும், விஷயங்களை பகிர்ந்துகொள்வதற்கும் தயங்குகிறார்கள்.

இப்படி தயங்கித்திரியும் பெண்களிடம் மற்றவர்களும் நெருங்கிப் பேசுவதில்லை. அதனால் அவர்கள் தனிமைப்படுத்தப்படும் நிலை உருவாகிறது. எப்போதும் வேலை வேலை என்று இயந்திரம்போல் செயல்படும் அவர்களை பயமும், கவலையும் வாட்டுகிறது. அதில் இருந்து விடுபடும் வழிதெரியாமல் மிக விரைவாகவே மன அழுத்தத்திற்கு உள்ளாகிவிடுகிறார்கள். கடமை, பொறுப்பு இரண்டையும் முழுமனதோடு நிறைவேற்ற வேண்டும் என்று கண்ணுங்கருத்துமாய் பெண்கள் செயல் படுவதால், அவர்கள் ஆண்களைவிட இரு மடங்கு அதிகமாக மன அழுத்தத்திற்கு உள்ளாகிறார்கள்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker