சமையல் குறிப்புகள்

அருமையான கருணைக்கிழங்கு கட்லெட்

கருணைக்கிழங்கில் வறுவல், குழம்பு செய்து சாப்பிட்டு இருப்பீங்க. இன்று கருணைக்கிழங்கை வைத்து சூப்பரான கட்லெட் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

  • கருணைக்கிழங்கு – 100 கிராம்
  • பூண்டு – 10 பல்
  • இஞ்சி – சிறிய துண்டு
  • சோம்பு – 1 டீஸ்பூன்
  • சீரகம் – 1 டீஸ்பூன்
  • கடலை மாவு – 1 கப்
  • பெரிய வெங்காயம் – 3
  • கொத்தமல்லி – 2 கொத்து
  • மிளகாய் தூள் – தேவைக்கேற்ப
  • மஞ்சள் தூள் – சிறிது
  • உப்பு – தேவைக்கேற்ப
  • கறிவேப்பிலை – சிறிது
  • எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

  • இஞ்சியை தோல் சீவிக் கொள்ளவும்.
  • பூண்டை தோல் உரித்து எடுத்துக் கொள்ளவும்.
  • கொத்தமல்லி, வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  • பூண்டு, சோம்பு, சீரகம், இஞ்சி சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
  • கருணைக்கிழங்கை ஒரு பாத்திரத்தில் போட்டு அரிசி களைந்த தண்ணீரை ஊற்றி குக்கரில் வைத்து வெய்ட் போட்டு 10 நிமிடம் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். அரிசி களைந்த தண்ணீரில் செய்தால் சாப்பிடும் போது விறு விறு என்று இருக்காமல் இருக்கும்.
  • கருணைக்கிழங்கு வெந்ததும் தோல் உரித்து நன்கு மசித்து விடவும்.
  • ஒரு பாத்திரத்தில் கடலை மாவுடன், உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து அரை கப் தண்ணீர் ஊற்றி தோசை மாவு பதத்தில் கரைத்துக் கொள்ளவும்.
  • வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நறுக்கின வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கவும்.
  • அதன் பிறகு அரைத்து வைத்த விழுது மற்றும் கறிவேப்பிலை போட்டு பச்சை வாசனை போகும் வரை ஒரு நிமிடம் வதக்கவும்..
  • அடுத்து அதில் மசித்து வைத்திருக்கும் கருணைக்கிழங்கை போட்டு 2 நிமிடம் நன்கு வதக்கவும்.
  • பிறகு தோசைமாவு பதத்தில் கரைத்து வைத்திருக்கும் மாவை ஊற்றி 2 நிமிடம் கிளறவும். 2 நிமிடம் கழித்து வாணலியில் ஒட்டாமல் கெட்டியாக ஆனதும் மேலே கொத்தமல்லி தழை தூவி நன்கு கிளறி இறக்கவும்.
  • ஒரு தட்டில் எண்ணெய் தடவி அதில் செய்த கலவையை போட்டு பரப்பி விடவும். பிறகு அதை வில்லைகளாக போட்டு எடுத்துக் கொள்ளவும்.
  • வாணலியில் ஒரு கப் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் எடுத்து வைத்த வில்லைகளை போட்டு ஒரு நிமிடம் கழித்து திருப்பி போட்டு ஒரு நிமிடம் வைத்து வெந்ததும் எடுத்து பரிமாறவும்.
  • சூப்பரான கருணைக்கிழங்கு கட்லெட் ரெடி.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker