ஜிம்முக்கு போகாமலே தசை வளர்ச்சியை அதிகரிக்க இந்த 9 உணவுகள சாப்பிட்டு வாங்க!
ஜிம்முக்கு போய் பாடி பில்டிங் செய்யும் பலருக்கு தசை வளர்ச்சி அதிகரிக்காமல் இருப்பதால் கண்ட மருந்துகளையும், கண்ட பானங்களையும் சாப்பிடுகின்றனர். இதனால் அவர்களின் உடல் வளர்ச்சியும் சேர்த்தே பாதிக்கப்படும் என்பது குறிப்பிட தக்கது. சிலர் ஜிம்முக்கு போய் தசை வளர்ச்சியை பெறுகின்றனர். இருப்பினும் ஜிம்முக்கு போய் தசை வளர்ச்சியை பெற முடியாமல் அவதிப்படுவோர் தான் அதிகம்.
தசை வளர்ச்சியை உணவுகளின் மூலம் கொண்டு வர இயலும் என ஆய்வுகள் சொல்கின்றன. சாதாரண உணவுகளை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் தசை வளர்ச்சி அதிகரிக்குமாம். எப்படிப்பட்ட உணவுகளை சாப்பிட்டால் தசை வளர்ச்சி கூடும் என்பதை பற்றி இந்த பதிவில் அறிந்து கொள்ளலாம்.
பாதாம்
தசை வளர்ச்சி அதிகரிக்க வேண்டும் என்கிற ஆசை உங்களுக்கு உள்ளதா? அப்போ தினமும் 5-8 பாதாம் சாப்பிட்டு வாருங்கள். பாதாமில் உள்ள ஊட்டச்சத்துக்கள் மற்றும் தாதுக்கள் உடலுக்கு அதிக வலுவை தந்து தசை வளர்ச்சிக்கு உதவும்.
முட்டை
புரதசத்து அதிகம் கொண்ட உணவுகளில் முட்டை முக்கியமானதாகும். அன்றாடம் 1 அல்லது 2 முட்டையை சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியம் அதிகரிக்கும். கூடிய விரைவிலே தசை வளர்ச்சியை அதிகரிக்க முட்டை அற்புதமான உணவாகும்.
மீன்
தசை வளர்ச்சியை உடனே அதிகரிக்க மீனை தொடர்ந்து சாப்பிட்டு வந்தாலே போதும். புரதசத்து மீனில் அதிக அளவில் உள்ளதால், உடலை கட்டுமஸ்தாக மாற்றி விடும். மேலும், இதய ஆரோக்கியத்தை அதிகரிக்கவும் மீன் உதவுகிறது.
சோயா பால்
சாதாரண பாலை விட சோயா பாலை குடித்து வருவதால் தசை வளர்ச்சி சீராக இருக்கும். உடனடியாக தசை வளர்ச்சியை கூட்ட சோயா பால் சிறந்த தேர்வாகும். மேலும், இது தாவரத்தில் இருந்து பெறப்படும் பால் என்பதால் உடலுக்கு எந்த பாதிப்பும் இருக்காது.
கடற்சிப்பி
ஜிம்மிற்கு போய் தசை வளர்ச்சியை அதிகரிக்க முடியாமல் தவிப்போருக்கு ஒரு எளிமையான வழி உள்ளது. அதாவது, கடற்சிப்பியை சமைத்து சாப்பிட்டாலே போதும். இதிலுள்ள அதிக படியான புரதசத்து மற்றும் கொழுப்பு சத்து தசை வளர்ச்சியை அதிகரிக்க உதவும்
சிக்கன்
மிக எளிமையான முறையில் தசை வளர்ச்சியை அதிகரிக்க சிக்கன் உதவும். தொடர்ந்து சிக்கனை சாப்பிட்டு வந்தால் உடனே தசை வளர்ச்சி பெறும். குறிப்பாக கோழியின் மார்பு பகுதி உடலுக்கு அதிக ஆரோக்கியத்தை ஏற்படுத்தும் என ஆய்வுகள் சொல்கின்றன.
பட்டாணி
மாலை நேரத்திலோ அல்லது காலி நேரத்திலோ பட்டாணி போன்றவற்றை ஸ்னாக்காக சாப்பிட்டு வந்தால் அதிக பலன் கிடைக்கும். இதிலுள்ள புரதசத்து அதிக பலத்தை உடலுக்கு தரும். தசை வளர்ச்சிக்கு பட்டாணி சிறந்த உணவாகும்.
பிரவுன் அரிசி
வெள்ளை அரிசியை விடவும் இந்த பிரவுன் அரிசி தான் தசை வளர்ச்சிக்கு ஏற்றது. இதிலுள்ள புரசத்து, அமினோ அமிலங்கள், தசை வளர்ச்சிக்கு உதவும். முடிந்த அளவுக்கு வெள்ளை அரிசியை தவிர்ப்பது நல்லது.
பால் பொருட்கள்
கவர்ச்சியான தசையை பெற வேண்டுமென்றால் அதற்கு பல் பொருட்களை அவ்வப்போது சாப்பிட்டு வருவது நல்லது. குறிப்பாக பால், சீஸ், தயிர் போன்றவை தசையின் வளர்ச்சிக்கு அருமையான உணவாகும்.