சமையல் குறிப்புகள்

சப்பாத்திக்கு அருமையான முட்டை புர்ஜி

நாண், தோசை, சாப்பாத்திக்கு தொட்டுகொள்ள அருமையாக இருக்கும் முட்டை புர்ஜி. இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம். சப்பாத்திக்கு அருமையான முட்டை புர்ஜி
தேவையான பொருட்கள் :

வெங்காயம் – 1

தக்காளி – 1
பச்சை மிளகாய் – 4
சோம்பு – சிறிதளவு
வெண்ணெய் – சிறிதளவு
உப்பு – சுவைக்கு
முட்டை – 3 (வெள்ளைக்கரு மட்டும்)
கரம் மசாலா தூள் – அரை ஸ்பூன்
மிளகாய் தூள் – 1 ஸ்பூன்
கொத்தமல்லி – சிறிதளவு

செய்முறை :

வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

ஒரு வாணலியில் வெண்ணெய் போட்டு அது உருகியவுடன் சோம்பு போட்டு தாளித்த பின் அதில் ப.மிளகாய், வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

வெங்காயம் நன்றாக வதங்கிய பின் அதில் தக்காளியை சேர்த்து வதக்கவும்.

இரண்டும் நன்றாக வதங்கிய பின் அதில் கரம் மசாலா தூள், மிளகாய் தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.

அடுத்து அதில் முட்டையை உடைத்து ஊற்றி நன்றாக கிளறவும்.

முட்டை நன்றாக வெந்து பூ போல உதிரியாக வந்ததும் அதில் கொத்தமல்லி தழையை தூவி இறக்கவும்.

சுவையான முட்டை புர்ஜி ரெடி.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker