ஆரோக்கியம்
கோடை வெப்பத்தை தணிக்க சாப்பிட வேண்டியவை.
கோடை வெப்பத்தை சமாளிக்க சில உணவுகளை கண்டிப்பாக சாப்பிட வேண்டும். அதே போல் சில உணவுகளை தவிர்க்கவும் வேண்டும். அவை என்னவென்று பார்க்கலாம். கோடை வெப்பத்தை தணிக்க சாப்பிட வேண்டியவை…
- தண்ணீருக்குப் பதிலாக தாதுக்கள் சேர்க்கப்பட்ட, உப்பு சேர்க்கப்பட்ட தண்ணீரை குடிக்கலாம்.
- அசதியாக இருப்பவர்கள் குளுக்கோஸ் கலந்த நீர் பருகலாம்.
- எலுமிச்சை, கிர்ணி, தர்பூசணி, ஆப்பிள், ஆரஞ்சு போன்ற பழங்களின் பானங்களை பருகலாம்.
- இளநீர் பருகலாம். வெள்ளரிக்காய், நுங்கு சாப்பிடலாம்.
- காலையும், மாலையும் தலைக்கு குளியல் போடலாம்.
- வாரத்தில் ஒரு முறையாவது மூலிகை எண்ணெய் தேய்த்து குளித்து உடல் சூட்டை தணிக்கலாம்.
- உடலில் சந்தனம் பூசிக் கொள்ளலாம். மஞ்சளும் பூசலாம்.
- பழங்களையும் அதிகமாக சாப்பிடலாம்.
- தண்ணீருடன் சேர்ந்த பழஞ்சோறு நல்லது. கூழ்- களி வகைகளை சாப்பிடலாம்.
- வெயிலில் செல்ல நேர்ந்தால் தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெயை உடலில் தேய்த்துக் கொள்ளலாம்.
சாப்பிடக்கூடாதவை
- மாம்பழம் சாப்பிடுவது உடல் சூட்டை அதிகரிக்கும். குறைவாக ஜூஸ் போட்டு பருகலாம்.
- சிக்கன் உணவும் உடல் உஷ்ணத்தை அதிகரிக்கும். கோடை நேரத்தில் இதை தவிர்க்கலாம்.
- அளவுக்கு அதிகமாக சாப்பிட வேண்டாம். சாப்பிட்டவுடன் மற்ற பானங்களை பருக வேண்டாம்.
- கார உணவுகள் வெயில்காலத்திற்கு நல்லதல்ல.
- செயற்கை குளிர்பானங்கள், நிறமூட்டப்பட்ட உணவுகளை தவிர்க்க வேண்டும்.