சமையல் குறிப்புகள்புதியவை

கோதுமை ரவை ஓட்ஸ் மசாலா தேப்லா

தேவையான பொருட்கள் :.

  • கோதுமை ரவை – கால் கப்,
  • கோதுமை மாவு – ஒரு கப்,
  • ஓட்ஸ் – ஒரு டேபிள்ஸ்பூன் (வேண்டுமெனில்),
  • ஓமம் – கால் டீஸ்பூன்,
  • எண்ணெய், உப்பு- தேவையான அளவு,
  • வெள்ளை மிளகுத்தூள் – அரை டீஸ்பூன்,
  • மஞ்சள் தூள் – அரை சிட்டிகை.



செய்முறை :.

  • அகலமான பாத்திரத்தில் கோதுமை மாவு, கோதுமை ரவை, ஓட்ஸ், ஓமம், உப்பு, மஞ்சள் தூள், வெள்ளை மிளகுத்தூள் சேர்த்து, மிருதுவாகப் பிசைந்து, 15 நிமிடங்கள் ஊறவிடவும்.
  • மாவைச் சிறிய உருண்டைகளாக உருட்டி, மெலிதான முக்கோணமாகச் செய்யவும்.
  • தவாவில் எண்ணெய் விட்டு, சூடானதும் தேப்லாவைப் போட்டு, இருபுறமும் திருப்பிப் போட்டு, வெந்ததும் தயிர் பச்சடியுடன் சாப்பிடலாம்.

குறிப்பு :.

கோதுமையில் உள்ள பலன்கள் முழுமையாக கிடைக்கும். நார்ச்சத்து நிறைந்தது. சர்க்கரை நோயாளிகள், உடல் பருமனானவர்களும் சாப்பிடலாம்.
ஓட்ஸ் சேர்த்துச் சாப்பிடுவதால், மதியம் வரை பசிக்காது. ஓமம் செரிமான மண்டலத்தை மேம்படுத்தும். மலச்சிக்கல் நீங்கும்.





Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker