ஆரோக்கியம்புதியவைமருத்துவம்

சர்க்கரை நோயை குணப்படுத்தும் உணவுகள்

சர்க்கரை நோயை குணப்படுத்தும் உணவுகள்

நீரழிவு (சர்க்கரை நோய்), உடல் எடை அதிகம் உட்பட பல பிரச்சினைகளுக்கு மருந்தாகும் மற்றும் முழுமையாக குணமாக்கும், இயற்கை உணவும் அதனை உண்ணும் முறையும் பற்றி பார்ப்போம்.

காலை உறக்கத்தில் இருந்து எழுந்ததும் மரச்செக்கு நல்லெண்ணெய் கொண்டு வாய் கொப்பளித்த பிறகு மூலிகை பற்பொடியால் பல் துலக்க வேண்டும். (பேஸ்ட் பிரஸை தவிர்த்தல் நல்லது). காலையில் உடல் சுத்தம் செய்த பிறகு முடிந்த அளவு நல்ல தண்ணீர் குடித்தல் முக்கியம்.

நமது உடலில் 70 சதவீதத்திற்கும் மேல் தண்ணீர் உள்ளது என்பதை நாம் அறிவோம், ஆனால் தண்ணீரின் தரத்தை பற்றி விழிப்புணர்வு நமக்கு இல்லை. பில்டர், மினரல், ஆர்.ஓ. வாட்டர் என்ற, சுத்திகரிக்கப்பட்டது எனும் பெயரில் நாம் குடிக்கும் தண்ணீரின் நைட்ரஜன் திறன் எவ்வளவு என்று நாம் பார்த்து குடிக்க வேண்டும். நம் உடலில் உள்ள ரத்தம், நிணநீர் சுத்தமானதாக இருந்தால் உடலில் எந்த ஆரோக்கியக் குறைவும் இல்லாமல் பார்த்துக் கொள்ளலாம். தண்ணீருடன் உண்ணும் உணவின் காரத்தன்மையிலும், அமிலத்தன்மையிலும்மிக அதிக கவனம் இருந்தால் சர்க்கரை குறைபாடு, அதிக எடை, மற்றும் பல உடல்சுக குறைகளை முற்றிலும் தவிர்க்கலாம்.

தரமற்ற சர்க்கரையால் பாதிக்கப்பட்டுள் ளோர்களுக்கு, காரத்தன்மை உள்ள உணவுகள் விவரம்:-

காலை உணவு:

நாட்டு மல்லி இலை, முருங்கை, கருவேப்பிலை, பப்பாளி, புதினா, துளசி, வெற்றிலை, மாயிலை, கொய்யா இலை, மாதுளை இலை இவற்றுள் கிடைப்பதை கைப்பிடி எடுத்து கொள்வோம். இரண்டு நெல்லிக்காய், மஞ்சள் சிறிதளவு, மிளகு-5, லவங்கம்-2, ஏலக்காய்-2 இஞ்சி சிறிதளவு தோல் நீக்கியது, தேங்காய், இந்துப்பு சிறிதளவு, அனைத்தையும் நன்றாக அரைத்து வடிகட்டாமல் குடிக்கலாம்.

வாழைத்தண்டு, வெண்பூசணி, குண்டு சுரக்காய், கேரட், பீட்ரூட், நூக்குல், சவ்சவ் போன்ற இயற்கையாக விளைந்த காய்கறிகளிலும் மேலே கூறியுள்ள பொருட்களை சேர்த்து ஒரு டம்ளர் சாறு குடிக்கலாம்.

உள்தோலுடன், மேல் தோல் மட்டும் நீக்கிய பப்பாளி, மாதுளை மற்றும் கொய்யாப் பழம் இவைகளுடன் பரங்கி விதை, வெள்ளரி விதை, சன் பிளவர் விதை, ஆளி விதை, சியாசீடு எனும் திருநீற்றுப் பச்சிலை விதை இவைகளையும் சிறிதளவு கலந்து பாதாம், பிஸ்தா, வால்நட் போன்ற கொட்டைப் பருப்புகளையும் சிறிதளவு சேர்த்து, மிக மிக நன்றாக மென்று, மென்று, உமிழ்நீருடன் கலந்து சாப்பிடலாம்.

இவைகளை தேங்காய் பாலுடன் கலந்து சாப்பிட்டுப் பாருங்கள்!. மிக முக்கியம், மிக மிக நன்றாக மென்று ரசித்து ருசித்து சாப்பிட வேண்டும். காலை 9 மணிக்கு முன்பே இவைகளை சாப்பிட வேண்டும். இன்சுலின் மற்றும் மருந்துகளில் இருந்து முற்றிலும் விடுபடவேண்டும் எனில் வேறு ஏதும் சாப்பிடாமல் இதை மட்டும் சாப்பிட்டால் போதுமானது. அதிக உடல் உழைப்பு தேவைப்படுபவர்கள் கேழ்வரகு, கம்பு கூழ் சாப்பிடலாம்.

இட்லி தோசை வேண்டும் என்று அடம்பிடிப்பவர்களுக்கு, பாரம்பரிய சிகப்பு அரிசி வகைகள், தோலுடன் கூடிய இயற்கை உளுந்து, சிறுதானியங்கள், வெந்தயம் கலந்து, அரைத்த மாவுடன் சிறிதளவு திரிகடுகம், திரிபலா, மஞ்சள் கலந்து இட்லி தோசை (கல் தோசை மட்டும்) செய்து சாப்பிடலாம். மேலும் இதே மாவை மல்லி, புதினா கருவேப்பிலை சட்னிகளுடன் கலந்து இட்லி செய்தும், அதிகமாக சட்டினியும் குறைவாக மாவும் கலந்து தோசை செய்தும் சாப்பிடலாம். நன்றாக மென்று, மென்று சாப்பிடுவதும், ரசாயன கலப்பு இல்லாமல் இருப்பதும், பசித்தால் மட்டுமே சாப்பிடுவதும் மிக மிக அவசியம். கடிகார முள் பார்த்து பசிக்காமல் நேரத்திற்குச் சாப்பிடுவதும், நடு இரவு நேரங்களில் சாப்பிடுவதும், பசித்தால் சரியான உணவு உண்ணாமல் இருப்பதும், நம் உடலுக்கு நாம் செய்யும் மிகப்பெரிய தீங்கு ஆகிவிடும்.

மதிய வேளை உணவு:

மிக நல்ல பலன்கள் தேவைப்படுபவர்கள், உண்பதற்கு அரை மணி நேரம் முன்பு, சுக்கு, மல்லி, கருஞ்சீரக காப்பி சிறிது அருந்திவிட்டு, தேவைக்கு ஏற்ப 400 முதல் 500கிராம் வரை பச்சை காய்கறிகள் சாலட் செய்து வயிறு நிறைய சாப்பிடலாம். உதாரணம், பீர்க்கங்காய், புடலங்காய் இரண்டையும் லேசாக மேல் தோல் நீக்கி உள்ளிருக்கும் விதை மற்றும் நார் போன்ற பகுதிகளை நீக்கிவிட்டு, பூ போன்று சீவி (அல்லது) மிக மிக சிறிதாக நறுக்கி அத்துடன் தேங்காய் துருகியது, மிளகு தூள் சிறிது, முளைக்கட்டிய தானியங்கள் சிறிதளவு, அவல் சிறிதளவு, விதைகள், கொட்டை பருப்புகள் சிறிதளவு, குடமிளகாய், தக்காளி, வெங்காயம், தேவையான அளவு மல்லி, புதினா, கருவேப்பிலை தாளித்தோ, பச்சையாகவோ கலந்து சாப்பிடலாம்.

இதேபோல் கேரட், பீட்ரூட், நூக்கல், சவ்சவ், வெள்ளரி, சுரைக்காய், வெண்பூசணி, மஞ்சள் பூசணி, போன்ற இயற்கையாக விளைந்த காய்களை, மேலே குறிப்பிட்டுள்ளது போல் திருகி, பூ போன்று எடுத்துக்கொண்டு, குறிப்பிட்டுள்ள மற்ற கலவைகளையும் கலந்து, வேக வைக்காமல் பச்சை சாலட் ஆக சாப்பிடுவோர்கள், மிக விரைவாக தரமற்ற சர்க்கரை பாதிப்பில் இருந்து குணமடையலாம்.

மேலும் வெந்தயக்கீரை, பசலைக் கீரை முருங்கைக் கீரை, முள்ளங்கி கீரை பீட்ரூட் கீரை போன்ற கீரை வகைகளை (இயற்கையாக விளைந்ததுதானா என்பதை உறுதி செய்தபிறகு) சுத்தமாக தயார் செய்து வைத்துக் கொண்டு இஞ்சி, பூண்டு, மஞ்சள், மிளகு, சீரகம், ஓமம் சுத்தமான பெருங்காயம், கடுகு மற்றும் தேவையான மசாலாக்களை மரச்செக்கு நல்லெண்ணெய், கடலை எண்ணெய் போன்ற (தங்கள் மூதாதையர் பயன்படுத்திய வகைகள்) இவற்றில் சிறிதளவு பாசிப் பருப்பும் சேர்த்து வதக்கி தண்ணீர் விட்டு கொதிக்க விட்டு, நன்றாக கொதிக்கும்போது நெருப்பை அணைத்துவிட்டு, தயாராக இருக்கும் கீரைகளை கலந்து, கிண்டி மூடி வைத்து பிறகு கீரையை மட்டும் ஒரு கப் சாப்பிடுங்கள். இத்துடன் ஒரு சிறிய கப் சுண்டைக்காய் அல்லது பச்சை பட்டாணி பொறியல் சாப்பிடலாம்.

மாலை நேர உணவு:

மாலை 3 மணியிலிருந்து 5 மணிக்குள் நெருஞ்சில், கீழாநெல்லி, மூக்கரட்டை, சிறுபீளை இவைகளை ஒரு சிறிய தேக்கரண்டியும், சுக்கு, மல்லி, காபி தூளும் கலந்து, தேநீர் செய்து குடிக்கலாம். இதை ஒரு மணிக்கும், மதியம் 3 மணிக்கு இடையிலும் குடிக்கலாம். கருப்பட்டி இயற்கை வெல்லத்தில் செய்த எள்ளுருண்டை, கடலை உருண்டை, பட்டாணி, பொட்டு கடலை, மூக்கு கடலை, முளை கட்டிய வேகவைக்காத தானியங்கள், அவல், பொரி போன்ற தின்பண்டங்களையும் சிறிதளவு சாப்பிடலாம்.

கொய்யாப்பழம், வாழைப்பழம் (தோலுடன்) போன்ற நம்ம ஊர் பழ கலவைகளை செய்து, மாலை அல்லது இரவு 7 மணிக்கு முன்பாக சாப்பிடலாம். பாரம்பரிய சிகப்பு அரிசி வகைகளிலும், மூங்கில் அரிசி, கருப்பு கவுனி, காலா நமக், பெரிய மண்வாரி, மிளகு சம்பா போன்ற மருத்துவ குணம் நிறைந்த பாரம்பரிய அரிசிகளிலும் கஞ்சி செய்து, இரவு 7 மணிக்கு முன்பாக பசித்தால் மட்டும் சிறிதளவு சாப்பிடலாம்.

இரவு நன்றாக தூங்குவதற்கு சிறிதளவு கசகசா, தேங்காய், பேரிச்சை, அமுக்கரா போடி கலந்து நன்றாக மென்று உமிழ்நீருடன் கலந்து சாப்பிட்ட பிறகு தூங்க சென்றால் குழந்தையைப் போல தூங்கலாம்.

அன்பர்களே இவைகள் எல்லாம் எனது அனுபவ உண்மைகள். பல நூற்றுக்கணக்கானோர் பயனடைந்துள்ளார்கள். நீங்களும் முழுமையாக முயற்சி செய்தால் அனுபவத்தில் உண்மையை உணர்வீர்கள்.

மருந்துகளை தவிர்க்க

இன்சுலின் எடுத்துக்கொள்பவர்கள் நான் கூறியுள்ளதுபோல் பச்சை காய்களும், கீரை சாறுகளும் சாப்பிட்டாலே பக்க விளைவுகளையும், அதிகளவு இன்சுலினையும் தவிர்க்கலாம். மருந்து மாத்திரைகள் எடுத்துக்கொள்பவர்கள் ஆவியில் பாதி வேகவைத்த காய்களும், கீரைகளும், சிறிதளவு அவல் உணவுகளும் எடுத்துக்கொண்டால் மருந்துகளை தவிர்க்கலாம். இன்சுலின் மருந்துகள் அனைத்தையும் முழுமையாக தவிர்க்க நினைப்பவர்கள் முழுமையாக அல்கலைன் (காரத்தன்மை) உணவு 80 சதவிகிதமும் அமிலத்தன்மை (அசிடிக்) உணவு 20 சதவிகிதமும் எடுத்தால் மிகவும் நல்ல பலன் கிடைக்கும்.

நாம் ஒருவரையருவர் தொடர்புகொள்ளும்போதும், பார்க்கும்போதும் சாப்பிட்டீர்களா என கேட்ப்பதை சற்று மாற்றி, நிறைய பச்சை காய்கள், கீரைகள், பழங்கள் சாப்பிட்டீர்களா என கேட்டாலே நிறைய மாற்றம் ஏற்படும்.

இவை அனைத்தையும் ஒரு நல்ல தகவல்களாக மட்டும் கருதி, இயற்கை மருத்துவர்களின் ஆலோசனைபெற்று, இதுபோன்ற உணவு மருத்துவத்தை கடைபிடிக்கவேண்டும்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker