சமையல் குறிப்புகள்

சூப்பரான டிபன் சேமியா உப்புமா

மாலையில் பள்ளியில் இருந்து வரும் குழந்தைகளுக்கு சேமியா உப்புமா செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். இன்று இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

  • சேமியா – 2 கப்,
  • பெரிய வெங்காயம் – 2,
  • கறிவேப்பிலை – சிறிது,
  • கொத்தமல்லித்தழை – சிறிது,
  • உப்பு – தேவைக்கு.

தாளிக்க :

  • கடுகு – 1 டீஸ்பூன்,
  • உளுத்தம்பருப்பு – 1 டீஸ்பூன்,
  • கடலைப்பருப்பு – 2 டீஸ்பூன்,
  • இஞ்சி – 1 துண்டு,
  • பச்சை மிளகாய் – 4,
  • எண்ணெய் – 4 டேபிள்ஸ்பூன்.

செய்முறை :

  • சேமியாவை வெறும் கடாயில் போட்டு லேசாக வறுத்துகொள்ளவும்.
  • வெங்காயத்தை நீளமாக நறுக்கி கொள்ளவும்.
  • கொத்தமல்லி, இஞ்சி, பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கி கொள்ளவும்.
  • கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு போட்டு தாளித்த பின்னர் வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, சிட்டிகை உப்பு சேர்த்து 5 நிமிடம் நன்கு வதக்கவும்.
  • வெங்காயம் சற்று வதங்கியதும் 3 கப் தண்ணீர், தேவையான உப்பு சேர்த்து நன்கு கொதிக்கவிடுங்கள்.
  • அதில் வறுத்த சேமியாவை சேர்த்து 2 நிமிடம் பெரிய தீயில் வேக விட்டு, பிறகு 5 நிமிடம் குறைந்த தீயில் மூடி போட்டு நன்கு வேகவிட்டு கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.
  • சூடான சேமியா உப்புமா ரெடி.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker