பொங்கல் வைக்க நல்ல நேரங்கள்
15.1.19 செவ்வாய் (உத்தாரயண தர்ப்பணம் செய்து முடித்த பிறகு) காலை 8 மணிக்குள்ளாக சூரிய சுக்ர ஹோரையில் ஸ்ரீசூர்ய நாராயணருக்கு பூஜைக்கு நிவேதனம் செய்ய, புதிய அடுப்பில் புதிய பொங்கல் பானையை வைக்க சிறப்பான நேரம். காலை 7.45 மணி முதல் 9.45க்குள் பொங்கலிடலாம்.
பூஜையை எப்போது செய்யலாம்?
15.1.19 செவ்வாய் பித்ரு தர்ப்பணம் முடிந்த பிறகு காலை 8 மணி முதல் 9.40 மணிக்குள் அல்லது பகல் 11.10 முதல் 11.40க்குள் (சூர்யோதயம் 6.40), சந்திர ஹோரையில் ஸ்ரீ சூர்ய நாராயணருககு (சங்க்ராந்தி) பூஜை செய்ய சிறந்த நேரம். மேலும் இன்று முழுவதுமே சூரியனை பூஜைகள் ஸ்தோத்ர பாராயணம் அர்ச்சனை முதலியவற்றால் ஆராதிப்பது மிகவும் சிறந்தது.
கணுப்பிடி வைப்பது எப்போது?
16.1.19 புதன்கிழமை பொங்கலுக்கு மறுநாள் சூரியோதயத்துக்கு முன்பாக அதிகாலை 5.30 மணி முதல் 6.40 மணிக்குள் சூரிய ஹோரையில் பெண்கள், தங்கள் சகோதரர்களின் நன்மைக்காக கணுப்பிடி வைக்க சிறந்த நேரமாகும்.
கோ பூஜை எப்போது?
16.1.19 புதன் மாட்டுப் பொங்கல் நாளன்று தேவேந்திரனுக்கும் பசுமாட்டிற்கும் பூஜையை காலை 9.40 மணிக்கு மேல் 10.40&க்குள் குரு ஹோரையில் செய்வது மிகவும் உத்தமமாகும்.