கல்யாணத்திற்கு பிறகும் கனவுகள் அரங்கேறும்..
வாழ்க்கையில் திருமணத்திற்கு முன்பு கல்விரீதியாக நிறைய கற்றுக்கொள்கிறோம். திருமணத்திற்கு பிறகு கணவரிடம் இருந்தும், குழந்தையிடம் இருந்தும் புதிய விஷயங்களை கற்றுக்கொள்ள முடிகிறது. குழந்தையை வளர்ப்பது என்பது நமக்கு கடினமான வேலையில்லை. நமது குழந்தை எப்படி வளரவேண்டும் என்று நினைக்கிறோமோ அப்படியே நாம் வாழ்ந்து காட்டவேண்டும்.
திருமணமான பெண்கள் தாய்மையடைந்து பிரசவித்ததும் இயல்பாகவே அவர்களது உடல் எடை அதிகரித்து விடுகிறது. அதை சுட்டிக்காட்டிதான், திருமணத்திற்கு பின்பு பெண்களின் அழகு குலைந்துவிடுவதாக சொல்கிறார்கள். தொடர்ந்து முறையான உடற்பயிற்சிகளை செய்துவந்தால், உடல் எடையை கட்டுக்குள் கொண்டுவந்து உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க முடியும்.
மணமான பெண்கள் இப்போது உடல்வலுவோடுதான் இருக்கிறார்கள். ஆனால் செக்குமாடு மாதிரி ஒரே வேலையை செய்தும், ஒரே மாதிரியான சிந்தனையில் உழன்றும் மனஅழுத்தத்தில் சிக்கி மனபலம் இல்லாதவர்களாக காட்சியளி்க்கிறார்கள். இதுபோன்ற போட்டிகளில் கலந்துகொள்ள தங்களை தயார்படுத்திக்கொள்ளும்போது அவர்கள் சிந்தனை, செயல் எல்லாவற்றிலுமே மாற்றம் ஏற்பட்டு மகிழ்ச்சி உருவாகும். 40 வயதுகளில் நிற்கும் அம்மாக்கள் அனைவருமே உடல் நலத்தோடு, மனநலத்தையும் பாதுகாத்தால்தான் வாழ்க்கை மகிழ்ச்சியாக அமையும். அதற்கான முயற்சிகளை பெண்கள் முழுமனதோடு மேற்கொள்ளவேண்டும்.
மகிழ்ச்சியாக இருக்கும் எல்லோரிடமும் உயிரோட்டமான புன்னகை இருந்துகொண்டிருக்கும். மகிழ்ச்சி வேண்டுமானால், மனநிறைவு இருக்கவேண்டும். மனநிறைவு பெறவேண்டுமானால் இருப்பதைக் கொண்டு திருப்தியடையவேண்டும். மகிழ்ச்சியாக இருக்கும் பெண்ணால், அவளது குடும்பத்தையே மகிழ்ச்சியாக வைத்திருக்கமுடியும். மகிழ்ச்சியும், மனதில் கருணையும் இருந்தால், நம்மால் பேரழகியாக வலம்வர முடியும்.