சமையல் குறிப்புகள்புதியவை
ஸ்நாக்ஸ் ரைஸ் பக்கோடா
தேவையான பொருட்கள் :
சாதம் – 2 கப்
வெங்காயம் – 1
இஞ்சி .- 1 துண்டு
பச்சைமிளகாய் – 2
கொத்தமல்லித்தழை – சிறிதளவு
கறிவேப்பிலை – 1 கொத்து
உப்பு, எண்ணெய் – தேவையானது
செய்முறை :
வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
ஒரு அகண்ட பாத்திரத்தில் வடித்த சாதத்தை போட்டு நன்றாக குழைத்து கொள்ளவும்.
அதனுடன் கடலைமாவு, பொடியாக நறுக்கிய வெங்காயம், இஞ்சி, பச்சைமிளகாய், கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை, தேவையான உப்பு, காய வைத்த எண்ணெய் ஒரு மேசைக்கரண்டி எல்லாவற்றையும் சேர்த்து நன்கு பிசையவேண்டும்.
அடுப்பில் கடாயில் எண்ணெய் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பிசைந்து வைத்துள்ள மாவை பக்கோடாவுக்கு போடுவது போல் கிள்ளி போட்டு சிவந்ததும் எடுத்து பரிமாறவும்.
சூப்பரான ரைஸ் பக்கோடா ரெடி.