கிறிஸ்துமஸ் ஸ்பெஷல்: நட்சத்திர குக்கீஸ்
மைதா மாவு – 100 கிராம்
வெண்ணெய் – 50 கிராம்
பட்டைத்தூள் – அரைடீஸ்பூன்
தூளாக்கிய சர்க்கரை – தேவைக்கு
ஏலக்காய்த்தூள் – சிறிதளவு
கிராம்புத்தூள் – அரை டீஸ்பூன்
பட்டர் பேப்பர் – தேவைக்கு
செய்முறை:
வெண்ணெயுடன் மைதா மாவு, சர்க்கரை, கிராம்புத்தூள், பட்டைத்தூள், ஏலக்காய் தூள், உப்பு ஆகியவற்றை சேர்த்து சப்பாத்தி மாவு பதத்துக்கு பிசைந்து கொள்ளவும்.
பின்னர் சப்பாத்தி தயார் செய்வது போல் மெலிதாக உருட்டிக்கொள்ளுங்கள்.
அதனை நட்சத்திர வடிவங்களில் வெட்டி பட்டர் பேப்பர் மேல் வைத்து அரை மணி நேரம் பிரிட்ஜில் வையுங்கள்.
பின்னர் வெளியே எடுத்து ஓவனில் உள்ள பேக்கிங் டிரேவில் பட்டர் பேப்பர்களை விரித்து அதில் நட்சத்திர வடிவ குக்கீஸ்களை வைத்து 180 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் கால் மணி நேரம் வையுங்கள்.
குக்கீஸ்களின் விளிம்பு பகுதி பிரவுன் நிறத்திற்கு மாறியதும் வெளியே எடுத்து ஆறவைத்து ருசிக்கலாம்.