ஆரோக்கியம்புதியவை

சில நோய்களுக்கு இயற்கை வைத்திய முறையில் தீர்வு

சித்தரத்தை எடுத்து இடித்து பொடி செய்துக் கொள்ள வேண்டும். இந்த பொடியுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் தொண்டைப்புண்  குறையும்.
பனங்கருப்பட்டியில் இரும்பு மற்றும் கால்சியம் சத்து அதிகமாக உள்ளது. இதனால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. வைட்டமின்-பி, மற்றும் அமினோ அமிலங்கள் நிறைந்துள்ள கருப்பட்டி நீரிழிவு நோயை கட்டுப்படுத்துகிறது..
கற்பூரவல்லி, நல்லெண்ணெய், சர்க்கரை ஆகியவற்றை கலந்து நன்கு கலக்கி நெற்றியில் பற்று போட்டு வந்தால் தலைவலி குறையும்.




கஸ்தூரி மஞ்சள், சாம்பிராணி, கடுகு ஆகியவற்றை சம அளவு எடுத்து தண்ணீர் விட்டு அரைத்து சுட வைத்து அதை இளம் சூட்டில் சிறிது கற்பூரம் கலந்து வீக்கம், வலிஉள்ள இடங்களில் தடவி வந்தால் மூட்டுவலி குறையும்.
கடுகை அரைத்து காதுக்கு பின்புறம் பற்று போட்டு வந்தால் குளிர்ச்சியினால் ஏற்படும் காதுவலி குறையும்.
வெள்ளை நத்தியாவட்டைப் பூவை எடுத்து கண்களில் மேல் வைத்து அடிக்கடி ஒற்றிக்கொண்டே இருந்தால் கண்களில் ஏற்படும் உஷ்ணம்  குறையும்.
மாதவிடாய் காலத்தில் பெண்கள் வயிற்று வலி மற்றும் பிடிப்புக்களை சந்திப்பார்கள். இந்த சமயத்தில் வெந்தய டீயைக் குடித்தால், வலியில்  இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும்.
பலா இலையை எடுத்து சிறியதாக நறுக்கி தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி அதனுடன் பனங்கற்கண்டை கலந்து காலையில்  சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண் குறையும்.
தக்காளியை சமைக்காமல் பச்சையாக மென்று சாப்பிடுவதால் வாய்ப்புண் ஆறும் தக்காளி ஜூஸை வாயில் விட்டு கொப்பளித்து  விழுங்கினாலும் உடனடி பலன் தெரியும்.




சிறுநீர் அடர் மஞ்சள் நிறத்தோடும் நாற்றத்தோடும் எரிச்சலோடும் வெளியேறினால் சிறுநீரகத்தில் கழிவுகள் அதிகம் தேங்கியுள்ளது.என்பதை இது.உணர்த்துகின்றது. இதற்கு வெது வெதுப்பான நீரில் எலுமிச்சையை பிழிந்து கல் உப்பு சேர்த்து குடித்து வர கழிவுகள் விரைவாக வெளியேறி சிறுநீர் தெளிவாக எரிச்சலின்றி வெளியேறும்.




Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker