சமையல் குறிப்புகள்புதியவை

பாகற்காய் ஊறுகாய் செய்வது எப்படி?

பாகற்காய் ஊறுகாய் செய்வது எப்படி?






தேவையான பொருட்கள் :

பாகற்காய் – 200 கிராம்
நல்லெண்ணெய் – 100 கிராம்
மிளகாய் தூள் – காரத்திற்கு ஏற்ப
வெந்தைய தூள் – 2 டீஸ்பூன்
பெருங்காய் தூள் -1 டீஸ்பூன்
கடுகு – 1 டீஸ்பூன்
கல் உப்பு – சுவைக்கேற்ப.

வினிகர் – 150 மில்லி

செய்முறை :

பாகற்காயை நன்றாக கழுவி துடைத்து விட்டு அதை நறுக்கி உள்ளிருக்கும் விதைகளை நீக்கி விட்டு பொடிபொடியாக நறுக்கி கொள்ளவும் .அதை ஈரம் இல்லாத ஒரு பாத்திரத்தில் விட்டு அதோடு கல் உப்பை சேர்த்து நன்றாக பிசைய வேண்டும்.

ஒரு 10 நிமிடங்கள் கையால் பிசைந்து விட்டு, அதை அப்படியே ஒரு நாள் மூடி போட்டு வைத்து விட வேண்டும். கண்ணாடி பாட்டிலில் போட்டு வைத்தல் மிக நல்லது.

மறுநாள், ஒரு கனமான வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், அதில் கடுகை போட்டு பொரிய விடவும்.

அடுப்பை மிதமான தீயில் வைத்து பெருங்காய தூள், வெந்தய தூள் இவற்றை போட்டு பொரிந்ததும் அதில் மிளகாய் தூள் போட வேண்டும்.






மறு நிமிடமே ஊற வைத்துள்ள பாகற்காயை போட்டு சில நிமிடம் நன்றாக வதக்க வேண்டும்.

பாகற்காய் ஒரு அளவு வதங்கியதும், அதில் வினிகரை ஊற்றவும்.

அடுப்பை சிம்மில் வைத்து வினிகர் வற்றும் வரை கைவிடாமல் நன்றாக கிளறி கொண்டே இருக்க வேண்டும்.

வினிகர் முழுவதும் வற்றி எண்ணெய் ஊறுகாயில் இருந்து பிரிந்து வர தொடங்கும் வரை இவ்வாறு செய்ய வேண்டும்.

நன்கு ஊறுகாய் பதத்திற்கு வந்ததும், அடுப்பில் இருந்து இறக்கி, ஆறவைத்து மீண்டும் கண்ணாடி பாட்டிலில் போட்டு வைக்கவும்.

இரண்டு அல்லது மூன்று நாட்கள் ஊறியதும் எடுத்து உபயோகப்படுத்தலாம்.

சூப்பரான பாகற்காய் ஊறுகாய் ரெடி.






குறிப்பு:

பெருங்காயதூள், வெந்தய தூள் இவற்றை எண்ணெயில் போட்டு பொரிந்த உடனே மிளகாய் தூள் சேர்க்க வேண்டும். மிளகாய் தூளை எண்ணெயில் போட்டதும் கருக விட கூடாது. உடனே பாகற்காயை சேர்த்து விட வேண்டும்.

கண்ணாடி அல்லது பீங்கான் பாத்திரங்களில் ஊறுகாய் வைப்பதன் மூலம் ஊறுகாய் நீண்ட நாட்களுக்கு கெட்டு போகாது. சுவையும் மாறாது. ஈர ஸ்பூன்கள் பயன்படுத்த கூடாது.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker