சமையல் குறிப்புகள்

ஆரோக்கியம் நிறைந்த வெஜிடபிள் சாண்ட்விச்

தேவையான பொருட்கள்

  • கோதுமை பிரெட் துண்டுகள் – 6
  • நெய் – சிறிதளவு
  • தக்காளி சாஸ் – 2 ஸ்பூன்
  • கோஸ் – 100 கிராம்
  • கேரட் – 100 கிராம்
  • பன்னீர் துருவல் – 2 ஸ்பூன்
  • வெண்ணெய் – சிறிதளவு




சட்னிக்கு…

  • புதினா – ஒரு கைப்பிடி
  • பூண்டு – 5 பல்
  • பச்சை மிளகாய் – 1

செய்முறை :

  • கோஸ், கேரட்டை துருவிக்கொள்ளவும்.
  • கேரட், கோஸ், பன்னீர் துருவலுடன், தேவையான அளவு உப்பு சேர்த்து தக்காளி சாஸ் ஊற்றி கலந்து கொள்ளவும்.
  • சட்னிக்கான பொருட்களை, சிறிதளவு தண்ணீர் விட்டு அரைத்துக்கொள்ளவும்.
  • பிரெட்டின் இருபுறமும் வெண்ணெய் தடவி, ஒருபுறத்தில் சட்னியை தடவவும்.
  • இதன் மீது கலந்து வைத்துள்ள காய்கறி கலவையை வைத்து, சட்னி தடவிய மற்றொரு பிரெட் துண்டை வைத்து மூடவும்.
  • தோசைக்கல்லில் நெய் சிறிது ஊற்றி சாண்ட்விச்சை இருபுறமும் நன்கு வேகவிடவும்.
  • சூப்பரான சத்தான வெஜிடபிள் சாண்ட்விச் ரெடி.



Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker