சூப்பரான சிக்கன் பன்னீர் கிரேவி
தேவையான பொருட்கள் :
எலும்பில்லாத சிக்கன் – அரை கிலோ
பன்னீர் – 100 கிராம்
வெங்காயம் – 2
தக்காளி சாஸ் – 1 ஸ்பூன்
சோயா சாஸ் – 1 ஸ்பூன்
தனியாத்தூள் – 1 ஸ்பூன்
சீரகத்தூள் – 1 ஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது – 1ஸ்பூன்
மிளகாய்த்தூள் – 1 ஸ்பூன்
செய்முறை :
வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
குடைமிளகாயை வட்ட வடிவமாக வெட்டிக்கொள்ளவும்.
சிக்கனை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும்.
பன்னீரை துண்டுகளாக வெட்டி வைக்கவும்.
வாணலியில் சிறு துண்டுகளாக நறுக்கிய பன்னீரை எண்ணெயில் போட்டு பொரித்து தனியாக வைக்கவும்.
மற்றொரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் சிக்கன் துண்டுகளுடன், தனியா, சீரகத்தூள், இஞ்சி பூண்டு விழுது, மிளகாய்த்தூள், உப்பு போட்டு வதக்கவும்.
பின் வட்டமாக நறுக்கிய குடைமிளகாய், வறுத்த பன்னீர் துண்டுகளை போட்டு வதக்கவும்.
இறுதியாக தக்காளி சாஸ், சோயாசாஸ் ஊற்றி கிளறி இறக்கவும்.