ஆரோக்கியம்புதியவைமருத்துவம்

முட்டைகோஸ் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

முட்டைகோஸ் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

முட்டைகோஸில் உள்ள பைட்டோ நியூட்ரியண்ஸ் மற்றும் வைட்டமின்களான ஏ, சி, கே போன்ற சத்துக்கள் அதிக அளவில் உள்ளது. மேலும் இவை உடலில் ஏற்படும் பிரச்சனைகளான புற்றுநோய், இதய நோய் மற்றும் ஆண்மை குறைபாடு போன்றவற்றை தடுக்கும்.




முட்டைகோஸை பச்சையாக சாப்பிடும் போது அதனுடைய சத்து அனைத்தும் நமக்கு கிடைக்கும் என்பதால் அதிகமாக வேக வைத்தோ அல்லது சமைத்தோ சாப்பிடாமல் அரைவேக்காடாகவோ அல்லது பச்சையாகவோ சாப்பிடலாம்.
மேலும் முட்டைகோஸ் வேக வைத்த நீர் அல்லது முட்டைகோஸ் சூப் ஆகியவற்றை தினமும் குடிப்பதால் உடலுக்குத் தேவையான சத்துக்கள் கிடைத்திடும். தொடர்ந்து உடல் சோர்வடையாமல் எப்போதும் சுறுசுறுப்புடன் இருக்க உதவிடும்.
மேலும் சர்க்கரை நோயாளிகள் இதனை தினமும் பின்பற்றி வந்தால் உடலில் சர்க்கரையின் அளவு சரியான நிலையில் பரமாரிக்கப்படும்.




இதில் உள்ள வைட்டமின் ஏ சத்து கண் பார்வை நரம்புகளை சீராக இயங்கச் செய்து கண் பார்வைக் கோளாறுகளைப் போக்க உதவுகின்றது.
நரம்புகளுக்கு வலுகொடுத்து நரம்புத் தளர்ச்சியைப் போக்கும் மற்றும் தொற்று நோய்கள் ஏற்படாமல் தடுத்து உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
ஜீரணத்தால் உண்டாகும் வயிற்றுவலியை நீக்கும். மேலும் சரும வறட்சியை நீக்கி சருமத்திற்கு பொலிவைக் கொடுக்கும்.
உடலில் இவை நல்ல வியர்வைப் பெருக்கியாக செயல்படும். சிறுநீரை நன்கு பிரித்து வெளியேற்றும். மேலும் தலைமுடி உதிர்வதைக் குறைக்கும். மயிர்க்கால்களுக்கு பலம் கொடுக்கும்.
இதில் உள்ள சுண்ணாம்புச்சத்து எலும்புகளும் பற்களும் உறுதியாகும்.மேலும் எலும்புகள் எப்பொழுதும் வலுமையுடன் இருக்க பெரிதும் உதவுகின்றன.




பெண்களுக்கு மெனோபாஸ் காலங்களில் உண்டாகும் கால்சியம், பாஸ்பரஸ் இழப்பை முட்டைகோஸ் ஈடுசெய்யும்.
முட்டைகோஸை நீரில் போட்டு சிறிது நேரம் ஊறவைத்து அந்த நீரைக் கொண்டு முகம் கழுவினால் வறட்சியான சருமம் பளபளப்படையும்.
உடல் சூட்டைத் தணிக்கும். நாள்பட்ட மலச்சிக்கலைப் போக்கும். குடல் சளியைப் போக்கும். இரத்தத்தை சுத்தப்படுத்தும்.




Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker