சமையல் குறிப்புகள்புதியவை
மாலை நேர ஸ்நாக்ஸ் வேர்க்கடலை தட்டை
தேவையான பொருட்கள் :வேர்க்கடலை – அரை கப்
பொட்டுக்கடலை – அரை கப்
கடலை மாவு – அரை கப்
அரிசி மாவு – அரை கப்
மிளகாய்த் தூள் – 1 தேக்கரண்டி
பெருங்காயத் தூள் – சிறிதளவு
வெண்ணெய் – தேவையான அளவு
உப்பு, எண்ணெய் – தேவைக்கு
செய்முறை:
வாணலியில் வேர்க்கடலையை போட்டு லேசாக வறுத்தெடுத்து தோல் நீக்கி கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.
பொட்டுக் கடலையையும் தூளாக்கி கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் பொட்டுக்கடலையை போட்டு அதனுடன் பொடித்த வேர்க்கடலை, அரிசி மாவு, கடலை மாவு, உப்பு, பெருங்காயத்தூள், மிளகாய்த்தூள், வெண்ணெய் ஆகியவற்றை கலந்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி பிசைந்து கொள்ளவும்.
பதத்துக்கு வந்ததும் தட்டைகளாக தட்டி எண்ணெயில் போட்டு பொரித்தெடுத்து ருசிக்கவும்.
சூப்பரான வேர்க்கடலை தட்டை ரெடி.
இதனை காற்று போகாத டப்பாவில் போட்டு வைத்து 1 வாரம் முதல் 10 நாட்கள் வரை பயன்படுத்தலாம்.