அழகு..அழகு..புதியவை

ஆண்களுக்கு வழுக்கை ஏற்படாமல் இருக்க தயிரை இப்படி பயன்படுத்தினாலே போதும்

இன்று பல ஆண்களுக்கு இருக்க கூடிய பிரச்சினைகளில் தலை முடி சார்ந்த பிரச்சினை மிக மோசமான ஒன்றாக உள்ளது. பல்வேறு காரணங்களினால் முடியின் ஆரோக்கியம் குறைந்து முடி கொட்ட செய்கிறது. தொடர்ந்து முடி கொட்டி கொண்டே இருப்பதால் வழுக்கை ஏற்படுகிறது.

பிறகு இதனை நினைத்து வருந்தியே மேலும் பல நோய்கள் வந்து விடுகின்றன. முடி கொட்டும் பிரச்சினைக்கு ஒரு பெரிய முற்றுப்புள்ளியை வைக்கிறது இந்த தயிர். தயிரை கொண்டே முடி பிரச்சினைகள் அடைத்திருக்கும் ஒரு வழி கட்டி விடலாம்.

வழுக்கைக்கு பல காரணம் உண்டு..!

பொதுவாக முடி உதிர்வு ஏற்பட்டு தலையில் வழுக்கை ஏற்படுவதற்கு பல காரணங்களை கூறலாம். பரம்பரை ரீதியாக, சீரற்ற உணவு முறை, வேதி பொருட்களை பயன்படுத்துதல், வலிமையற்ற முடி, அசுத்தமான சூழல், … இப்படி ஒரு சில முதன்மையான காரணங்கள் இருக்கின்றன. இவைதான் முடி உதிர்ந்து வழுக்கையை உண்டாக்குவதற்கான காரணிகளாகும்.
வெள்ளையின் மகிமை…!

பலருக்கு தயிர் என்றாலே பிடிக்காத ஒன்றாக இருக்கும். ஆனால், இதன் மகத்துவத்தை அறிந்தால் இனி வேண்டாம் என சொல்ல மாட்டார்கள். இதில் எண்ணற்ற முக்கிய ஊட்டச்சத்துக்களும், தாது பொருட்களும் உள்ளன. குறிப்பாக வைட்டமின் எ, பொட்டாசியம், விட்டமின் சி, கால்சியம், மெக்னீசியம், பாஸ்பரஸ், செலினியம், சோடியம் போன்றவை அதிகம் உள்ளது.

பொடுகை ஒழிக்க…

முடி உதிர்வதற்கு பொடுகும் ஒரு காரணம். இதனை முதலில் ஒழித்து விட்டால் பிறகு முடி உதிரும் பிரச்சினை முற்றுப்புள்ளிக்கு வந்து விடும்.

இதற்கு தேவையானவை…

வெந்தய பொடி 5 ஸ்பூன்

தயிர் 3 ஸ்பூன்

வெங்காய சாறு 2 ஸ்பூன்

செய்முறை :-

முதலில் வெந்தயத்தை பொடி செய்து வைத்து கொள்ளவும். அடுத்து வெங்காயத்தை அரைத்து சாற்றை மட்டும் எடுத்து கொள்ளவும். இப்போது தயிருடன் வெங்காய சாறு, வெந்தய பொடி ஆகியவற்றை நன்றாக கலந்து தலைக்கு தேய்த்து 20 நிமிடம் ஊற வைக்கவும். பிறகு, தலைக்கு குளிக்கவும். இந்த குறிப்பை வாரத்திற்கு 2 முறை செய்து வந்தாலே பொடுகு தொல்லை ஒழிந்து, முடி உதிராமல் இருக்கும்.
முடி கொத்து கொத்தாக கொட்டுதா..?

பலருக்கு இருக்கின்ற இந்த முடி கொட்டும் பிரச்சினைக்கு ஒரு எளிய தீர்வு தான் இந்த குறிப்பு. இதனை தொடர்ந்து செய்து வந்தாலே முடி கொட்டுவது குறைந்து விடும்.

தேவையானவை :- கை நிறைய கறிவேப்பில்லை

தயிர் 3 ஸ்பூன்

கை நிறைய மருதாணி

செய்முறை :-

முதலில் கருவேப்பில்லை மற்றும் மருதாணியை ஒன்றாக அரைத்து கொள்ளவும். பிறகு இந்த பேஸ்ட்டில் 3 ஸ்பூன் எடுத்து கொண்டு, தயிருடன் கலந்து கொள்ளவும். இந்த கலவையை தலைக்கு தேய்த்து 45 நிமிடம் ஊற வைக்கவும். பிறகு, தலைக்கு குளிக்கவும். இந்த குறிப்பு உங்களின் முடி கொட்டும் பிரச்சினைக்கு விரைவிலே முற்றுப்புள்ளி வைக்கும்.

அடர்த்தியான முடியை பெற

பலருக்கு முடி கொட்டி விட்டு, மிகவும் மெலிசான முடியே இருக்கும். இனி இந்த கவலையை போக்குகிறது தயிர் வைத்தியம்.

தேவையானவை :-

கை நிறைய செம்பருத்தி இலைகள்

தேங்காய் எண்ணெய் 4 ஸ்பூன்

தயிர் 3 ஸ்பூன்

செய்முறை :-

செம்பருத்தி இலையை தயிருடன் சேர்த்து அரைத்து கொள்ளவும். பிறகு இந்த பேஸ்டை தேங்காய் எண்ணெய்யில் போட்டு, 5 முதல் 10 நிமிடம் மிதமான சூட்டில் கொதிக்க விடவும். கொஞ்ச நேரம் ஆறவிட்டு பிறகு, இதனை தலைக்கு தேய்த்து 1 1/2 மணி நேரம் ஊற வைத்து தலைக்கு குளிக்கவும். இந்த வைத்தியம் முடியை அடர்த்தியாக வளர செய்யும்.
மென்மையான முடிக்கு…

முடி வறட்சியாகவும், சொர சொரப்பாகவும் இருக்கின்றதா..? இனி உங்கள் கவலைக்கு விடை தருகின்றது இந்த ஹேர் பேக்.

இதற்கு தேவையானவை…

எலுமிச்சை சாறு 1 ஸ்பூன்

தயிர் 2 ஸ்பூன்

தேன் சிறு துளிகள்

செய்முறை :-

முதலில் தயிருடன் எலுமிச்சை சாற்றை நன்றாக கலந்து கொள்ளவும். பிறகு, தேனையும் இவற்றுடன் சேர்த்து தலையில் தடவவும். 30 நிமிடம் கழித்து தலைக்கு குளிக்கவும். இந்த முறையை தொடர்ந்து செய்து வந்தால் முடி மிகவும் மென்மையாகவும், உறுதியாகவும் இருக்கும்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker