அழகு..அழகு..புதியவை
இயற்கை முறையிலான எளிய அழகு குறிப்புகள்
நாம் சாப்பிடும் உணவு மூலமாகவே அழகை அதிகப்படுத்தி காட்டலாம். வைட்டமின்கள், தாதுப் பொருட்களை உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். காய்கறி பழங்களையும் அதிகளவில் சாப்பிட வேண்டும்.
* பச்சை உருளைக்கிழங்கின் சாற்றை முகத்தில் தடவி வர, சூரியக் கதிர்களால் எற்படும் கருமை நிறம் மாறும்.
* பூசணிக்காய் சிறு துண்டுகளாக்கி அதை கண்களைச் சுற்றி வைப்பதால், கண்ணை சுற்றி ஏற்படும் கருமை நிறம் மாறும்
* பப்பாளி பழத்தை அரைத்து முகத்தில் தொடர்ந்து தடவி வர, முகப்பரு, கரும்புள்ளி ஆகியவை மறையும்.
* புளித்த மோரை முகத்தில் 15 நிமிடம் தடவி மிதமான சுடுநீரில் கழுவ, முகம் பொலிவு பெறும். இதை தொடர்ந்து ஒரு மாதம் செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.
* உலர்ந்த சருமம் உள்ளவர்கள் கிளிசரினுடன் ரோஸ் வாட்டர் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் தடவலாம்.
* வெள்ளரிச்சாறு, சந்தனபொடி, கடலைமாவு மூன்றையும் சம அளவு கலந்து முகம், கை கால்களுக்கு தினமும் போட்டு வந்தால் முகம் பிரகாசமாக இருக்கும்.
* ஆலிவ் எண்ணெயுடன் சர்க்கரை கலந்து உள்ளங்கைகளில் தேய்த்து கழுவ வேண்டும். இவ்வாறு செய்ய உள்ளங்கைகளின் கடினத் தன்மை மறைந்து மிருதுவாக மாறும்.