மலச்சிக்கலை உடனடியாக குணப்படுத்தும் முத்தான 5 டிப்ஸ்
உள்ளே போவதும், வெளியே வருவதும் பெரிய பிரச்சினையாக இப்போதெல்லாம் இருக்கிறது. அதாவது, உணவை சாப்பிடுவதும், சாப்பிட்ட உணவு சரியாக செரிமானம் அடைவதே மிக கொடுமையான ஒன்றாக உள்ளது. இப்படிப்பட்ட நிலைகளில் நாம் என்ன செய்யலாம் என்ற கேள்வி உங்கள் ஒவ்வொருவருக்கும் இருக்கும்.
மோசமான நிலையான மலச்சிக்லை நாம் எளிதாக குணப்படுத்தி விடலாம் என உடல்நல மருத்துவர்கள் கூறுகின்றனர். அதுவும் ஆரஞ்ச் பழத்தை வைத்து நம்மால் மலசிக்கலை போக்கிவிட முடியும். இது உண்மையில் சாத்தியம் ஆகுமா..? எப்படி இதை குணப்படுத்த முடியும் என்ற கேள்விக்கான விடையே இந்த பதிவு. முழுமையாக படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
காலையில் படும் பெரும்பாடு..!
ஒவ்வொரு காலையும் இன்பமாக தொடங்கும் என நாம் நினைத்தால், அது நாம் நினைப்பதை விட மோசமான நாளாக அமைந்து விடுகிறது. இதனை சரி செய்ய எண்ணற்ற வழி முறைகளை பயன்படுத்தி சார்ந்துள்ள அனைவருக்கும் வரப்பிரசாதமாக இந்த ஆரஞ்ச் பழம் அமைந்துள்ளது.
மாயாஜாலம் செய்யும் ஆரஞ்ச்..!
குறிப்பாக பளீர் வண்ணங்களில் உள்ள பழங்கள் அனைத்துமே ஏராளமான நன்மைகளை கொண்டது. அந்த வரிசையில் ஆரஞ்ச் பழமும் ஒன்று. இதில் வைட்டமின் சி, வைட்டமின் எ, கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம், பாஸ்பரஸ் போன்ற முக்கிய தாதுக்கள் உள்ளன. இவைதான் மலச்சிக்கலை குணப்படுத்துகின்றது.
வைத்திய முறை…!
ஆரஞ்சை அப்படியே சாப்பிடுவதை காட்டிலும் ஒரு சில மூலிகை தன்மை உள்ள எண்ணெய்யோடு சேர்த்து சாப்பிட்டால் கட்டாயம் மலசிக்கல் நீங்கி விடும்.
அதற்கு தேவையானவை…
ஆலிவ் எண்ணெய் 1 டேபிள்ஸ்பூன்
ஆரஞ்ச் சாறு 1 கிளாஸ்
செய்முறை :-
முதலில் ஆரஞ்ச் சாற்றுடன் ஆலிவ் எண்ணெய்யை நன்றாக கலந்து கொள்ள வேண்டும். பிறகு, இந்த சாற்றை மலசிக்கல் கொண்ட நாட்களில் பயன்படுத்தி கொள்ளலாம். ஆலிவ் எண்ணெய்க்கு பதிலாக ஆமணக்கு எண்ணெய்யையும் நாம் பயன்படுத்தி கொள்ளலாம்.
செரிமானம் சீக்கிரம் நடக்க…
உடலில் இருக்கும் பிரச்சினைகளில் முதன்மையானது இந்த மலச்சிக்கல். மலச்சிக்கலை குணப்படுத்துவதில் ஆரஞ்ச் சாறு முக்கிய இடத்தில் உள்ளது. செரிமானம் சீக்கிரமாக நடைபெற்றாலே மலச்சிக்கல் ஏற்படாது. இதனை செய்ய… தேவையானவை :- கற்றாழை ஜெல் 2 ஸ்பூன் ஆரஞ்ச் சாறு 1 கப்
செய்முறை :-
முதலில் கற்றாழை ஜெல்லை நன்றாக அரைத்து கொள்ளவும். பிறகு இதனை ஆரஞ்ச் சாற்றுடன் சேர்த்து கலந்து கொண்டு குடிக்கவும். இதனை 5 மணி நேரத்திற்கு ஒரு முறை, மலச்சிக்கல் குணமாகும் வரை குடித்து வந்தால் நல்ல பலனை அடையலாம்.
கலவை சாறு…
வைட்டமின் சி அதிகம் நிறைந்துள்ள இந்த ஆரஞ்ச் சாற்றை அப்படியே குடித்தாலும் மலச்சிக்கலை நீக்கி விடலாம். மேலும், இதனுடன் வேறொரு முக்கிய சாற்றை கலந்து குடித்தால் உடனடியாக பயன்பெறலாம்.
தேவையானவை :-
ப்ரூன் சாறு 1/2 கப்
ஆரஞ்ச் சாறு 1/2 கப்
செய்முறை :-
இந்த இரு பழங்களையும் தனி தனியாக சாற்றை மட்டும் எடுத்து கொள்ளவும். பிறகு, இவற்றை கலந்து கொண்டு குடித்து வரலாம். ஒரு சில மணி நேரத்திற்கு ஒரு முறை இந்த பழத்தை குடித்தால் மலச்சிக்கல் விரைவில் குணமாகி விடும். மேலும், இது அஜீரண கோளாறுகளையும் குணப்படுத்தி விடும்.
என்னதான் நடக்கும்..?
மலச்சிக்கலை போக்குவதற்கு பல்வேறு வழிகள் இருந்தாலும் இந்த ஆரஞ்ச் பழத்தை கொண்ட வழி மிகவும் எளிமையானதாகவும், விரைவில் குணமடைய கூடியதாகவும் இருக்கின்றது. அத்துடன் மலசிக்கல் ஏற்பட்டுள்ள இடத்தில் வலிமையையும், இலகுத்தன்மையையும் இது அதிகரிக்கும்.
தவிர்த்துக்கவும்..!
பொதுவாகவே நாம் சாப்பிட கூடிய சில மோசமான உணவுகள் தான் நமக்கு மலச்சிக்கலை தருகிறது. அதிகமான எண்ணெய் உணவுகள், பீட்சா, மைதா உணவுகள், போன்ற உணவுகள் நமது செரிமான மண்டலத்தையே பாதித்து விடுகிறது. இதனை தவிர்த்தாலே நலம் பெறலாம் நண்பர்களே.