பெண்களுக்கு அந்த இடத்தில் நோய்த்தொற்றுகள் வராமல் தடுக்கும் உணவுகள்
பிறப்புறுப்பு பகுதியில் காற்றோட்டம் குறைவாக இருக்கும். அதனால் எளிதில் கிருமிகளால் தொற்றுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. உடலில் அழகை மேம்படுத்த பலவற்றை செய்யும் பெண்கள், அவர்களின் அந்தரங்க பகுதி சுத்தத்தை மறந்துவிடுகிறார்கள்.
எலுமிச்சையில் சிட்ரஸ் அமிலங்கள் நிறைந்திருப்பதால் நோய் தொற்றை தவிர்க்கும். எலுமிச்சை டீயில் இருக்கும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், வைட்டமின் சி போன்றவை அந்தரங்க உறுப்பின் ஆரோக்கியத்திற்குத் அவசியமான சத்துக்கள் இதிலிருந்து கிடைக்கின்றன.
தயிரில் உள்ள புரோபயோடிக்குகள், யோனியின் சுவர்களில் நல்ல பாக்டீரியாக்களின் வளர்ச்சியை ஊக்குவித்து, தொற்றுகள் ஏற்படுவதைத் தடுக்கும். உடலை குளிச்சியுடன் வைக்கவும் உதவுகிறது.
சால்மன் மீனில், உடலுறவின் போது யோனியின் சுவர்கள் வறட்சியடையாமல் ஈரப்பசையுடன் இருக்கத் தேவையான ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உள்ளது. மேலும், இது மூளை வளர்ச்சிக்கும், அறிவாற்றலை அதிகரிக்கவும் உதவுகிறது.
முட்டையில் புரதம் மற்றும் வைட்டமின் டி சத்து உள்ளது. இது பிறப்புறுப்பில் ஏற்படும் பல நோய்த்தொற்றுகளைத் தடுக்க பெரிதும் உதவுகின்றன.
அவகேடோ பழத்திலும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உள்ளது. இதுவும் அந்தரங்க உறுப்பில் உள்ள செல்களுக்கு ஊட்டமளித்து, நோய்களை உண்டாக்கும் கிருமிகளை எதிர்க்கவும், வளர்ச்சி அடையாமல் தவிர்க்கவும் உதவுகின்றன.
ஸ்ட்ராபெர்ரியில் அந்தரங்க உறுப்பு ஆரோக்கியத்திற்குத் தேவையான வைட்டமின் சி மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உள்ளது. இவை மைக்ரோபியல் தொற்றுகள், ஈஸ்ட் தொற்றுகள் மற்றும் அந்தரங்க உறுப்பில் ஏற்படும் வறட்சியை தவிர்க்க உதவுகிறது.