உறவுகள்புதியவை

திருமண வாழ்வில் ஏற்படும் பிரச்சனையும் – அதற்கான தீர்வும்

திருமண வாழ்வில் ஏற்படும் பிரச்சனையும் - அதற்கான தீர்வும்

உங்களின் பார்ட்னர் உங்களிடம் சின்ன விஷயத்துக்கெல்லாம் கோபித்துக்கொள்கிறார் என்றால், அது உங்கள்மீதான கோபமல்ல. நிதானமாக இருந்து அந்தச் சூழ்நிலையை சகஜநிலைக்கு மாற்றுங்கள். என்ன செய்தால் உங்களின் பார்ட்னர் சகஜமாக மாறுவார் என்பதைத் தெரிந்துகொள்ள, கொஞ்சம் `ஹோம் வொர்க்’ செய்யவேண்டியிருக்கும். மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு ஹோம் வொர்க் செய்யலாமே!






தற்போது பெண்களும் அலுவலகம் செல்கின்றனர். எனவே, வீட்டுவேலைகளை சமமாகப் பிரித்து செய்வது அவசியம். பொதுவாக ஆண்கள், வீட்டுவேலைகள் செய்யத் தெரியாமலோ அல்லது செய்யப் பிடிக்காமலோ இல்லை. வீட்டுவேலைகள் செய்வதிலிருக்கும் கடுமையைப் புரிந்துகொள்ளாமல் இருப்பதுதான் மிக முக்கியமான காரணம். ஒருமுறை தன் மனைவியோடு நின்று அனைத்து வேலைகளையும் சமமாகப் பங்கிட்டு செய்தால் மட்டுமே, இந்தப் பிரச்னை தீரும். அன்பை அளவில்லாமல் பரிமாறிக்கொள்வதுபோல், வீட்டுச்சுமையையும் சமமாகப் பகிர்ந்துகொள்ளுங்கள்!

உங்கள் பார்ட்னரின் சிரிப்பு, அழுகை, கோபம் போன்ற `ரியல் நோட்டிஃபிகேஷனை’விட, உங்கள் போனில் வரும் `ரீல் நோட்டிஃபிகேஷனை’ சரிபார்க்கத்தான் நேரம் சரியாக இருக்கிறது. குறைந்தபட்சம், வார இறுதிநாளில் தொலைபேசி மற்றும் சமூக வலைதளங்களுக்கு விடுதலை கொடுத்து, உங்கள் பார்ட்னரோடு நேரத்தை முழுமையாகச் செலவிடுங்கள். மனம்விட்டு பேசும்போது எந்தக் கவனச்சிதறலும் இல்லாமல் இருப்பது சிறந்தது.

வங்கிக்கணக்கில் பணம் இருந்தாலும் சரி… இல்லைன்னாலும் சரி, பண விஷயத்தில் கணவன் – மனைவிக்கிடையே சண்டைவருவது இயல்பு. கணவன்-மனைவியாய் இருந்தாலும், ஒவ்வொருவருடைய தேவை என்பது வேறு. எண்கள் நிறைந்த தாள் என்பதையும் தாண்டி அது உணர்வுகளின் வெளிப்பாடு. `ஆசை’ இருக்கும் வரையில் `காசு’ வாழும். எது அத்தியாவசியம், எது வீண் செலவு என்பதை கணவன் – மனைவி இருவரும் ஆலோசித்து முடிவெடுப்பது அவசியம். தேவைக்கு மீறி செலவு செய்வதில் இருக்கும் பிரச்னைகளை நன்கு ஆராய்ந்து, பிறகு அடி எடுத்து வைப்பது நல்லது. உங்கள் அன்பை முறிக்கும் எந்த விஷயத்தையும் இருவருக்குமிடையில் அனுமதிக்காதீர்கள்.






சந்தோஷமான வாழ்க்கைக்காக சிறிது நேரம் உங்கள் பார்ட்னருக்குச் செலவிடுங்கள். அன்பைவிட வேறென்ன பெரிதாக இருக்கப்போகிறது.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker