அழகு..அழகு..புதியவை

நகங்கள் வளர்வதில்லையா? இப்படி பராமரியுங்கள்

நகங்கள் வளர்வதில்லையா? இப்படி பராமரியுங்கள்

நகங்கள் லேசான கடினத்தன்மையோடு இருந்தாலும் எளிதில் உடைந்து போகக் கூடியவை. ஆரோக்கியமான நகங்கள் இளஞ்சிகப்பு நிறத்தில் இருக்கும். நகங்களை வைத்து ஆரோக்கியத்தை மதிப்பிடலாம்.

அழகான இளஞ்சிவப்பு நகங்களைக் கொண்ட கைகளால் கைகுலுக்கும்போது, உங்கள் மீது நல்ல மதிப்பு உண்டாவதை தவிர்க்க முடியாது. அப்படி நகங்களை எப்படி பாதுகாக்கலாம். கொஞ்சம் அக்கறை எடுத்துக் கொண்டால் போதும். நகங்களை எப்படி பராமரிக்கலாம் என்று பார்க்கலாம்.






நகங்கள் வளர : சிலருக்கு நகங்கள் எளிதில் உடைந்துவிடும் தன்மையோடு காணப்படும். அவர்கள் இரவில் விரல் மற்றும் நகத்தில் சிறிது வெண்ணெய் தடவவும் . விரல் நகங்கள் உறுதியாக இருப்பதற்கு வெந்நீரில் எலுமிச்சைச் சாற்றை விட்டு, கைகளை அமிழ்த்துங்கள். வாரம் இருமுறை செய்து பாருங்கள். நகங்கள் சுத்தமாகவும், ஆரோக்கியமாகவும் வளரும்.

நகங்களை ஷேப் செய்ய : நகம் வெட்டவேண்டுமென்றால் தேங்காய் எண்ணெய் தடவி சிறிது நேரம் கழித்து வெட்டினால் எளிதாக வெட்டலாம். ஈரமாக இருக்கும் போது ஷேப் செய்தால், நகங்கள் உடைவதற்கான வாய்ப்பு உள்ளது. எனவே, நகங்கள் ஈரமாக இருக்கும்போது ஷேப் செய்வதை தவிருங்கள்.

தண்ணீரை மிதமாக சூடுபடுத்தி சிறிது உப்புக் கலந்து அதில் விரல்களை சிறிது நேரம் வைத்திருந்தால் விரல்கள் புத்துணர்ச்சியுடன் காணப்படும். நகங்கள் அடிக்கடி உடைந்து போகாமல், கோணலாக வளைந்து வளராமல் நேராக வளர கால்சியம் சத்துள்ள உணவு வகைகளை உண்ண வேண்டும்.

மென்மையான கைகள் கிடைக்க : பப்பாளிப்பழம் எடுத்து அதில் சிறிதளவை மசித்து கூழாக்கி அதனோடு கஸ்தூரி மஞ்சள் சிறிதளவு கலந்து பூசி சிறிது நேரத்திற்கு பின் கழுவினால் நாளடைவில் தோல் நல்ல மிருதுவாகவும் பளபளப்பாகவும் வரும்.

நகங்கள் ஆரோக்கியமாக வளரும். தூங்குவதற்கு முன் கை கால்களுக்கு வேஸ்லின், பெட்ரோலியம் ஜெல்லி, ஆலிவ் எண்ணெய் என்று பூசினால் நகங்கள் பலம்பெறும்.






செய்யக் கூடாதவை : நகத்தை பல்லால் கடிக்க கூடாது. நகங்களின் இடுக்குகளில் தங்கும் கிருமிகளால் தொற்று ஏற்படும்.

தினமும் நகச் சாயம் உபயோகிப்பதால் நகங்களின் நிறம் மங்கி காணப்படும். எனவே வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு நாட்கள் நகச் சாயம் உபயோகிக்காமல், இருப்பது நல்லது.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker