புதியவைவீடு-தோட்டம்

பற்பசையின் பளபளப்பான 10 வீட்டு உபயோகங்கள்

நாம் ஏதாவது ஒரு பொருளைக் காசு கொடுத்து வாங்கும் போது, அதை எத்தனை விதமாகப் பயன்படுத்தலாம் என்று யோசிப்பதுண்டு. அத்தகைய பொருட்களில் ஒன்று தான் பற்பசை. இந்தப் பற்பசை பற்களைச் சுத்தம் செய்வது மட்டுமின்றி, வேறு பல வழிகளிலும் பயன்படுகிறது.

சமையலறையைச் சுத்தம் செய்வதிலிருந்து முக அழகை அதிகரிப்பது வரை எத்தனையோ விஷயங்களுக்கு பற்பசையைப் பயன்படுத்த முடியும் என்றால் வியப்பாக இருக்கிறது அல்லவா? இந்த ‘ஆல் ரவுண்டர்’ பற்பசை நம் வீடுகளில் எப்படியெல்லாம் நமக்கு உதவுகிறது என்று பார்ப்போமா…

குறிப்பாக ஜெல் இல்லாத பற்பசைகள் தான் பயன்படும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.



பருக்களுக்கு

பற்பசையைத் தடவுவதன் மூலம் பருக்களைக் கரையச் செய்யலாம். பருக்களால் ஏற்படும் தொற்றுக்களையும் பற்பசை அழிக்கிறது.

தீப்புண்களுக்கு

சிறிய தீக்காயங்கள் மீது பற்பசையைத் தடவினால் உடனடி விமோசனம் கிடைக்கும். அது தற்காலிகமாக அந்த இடத்தைக் கூலாக்கும். பெரிய, திறந்துள்ள காயங்களுக்கு பற்பசையைப் பயன்படுத்தக் கூடாது, கவனம்!

நாற்றத்திற்கு

வெங்காயம், பூண்டு, மீன், இறைச்சி ஆகியவற்றைப் பயன்படுத்தும் போது இயல்பாகவே நம் கைகளில் மோசமான நாற்றம் ஏற்படும். கொஞ்சம் பற்பசையைக் கைகளில் நன்றாகத் தடவிக் கொண்டால், நாற்றம் போய் நறுமணம் கமழும்!

தோல் எரிச்சலுக்கு

பூச்சிகள் கடிப்பதால் ஏற்படும் தோல் எரிச்சலை பற்பசை போக்குகிறது. அரிப்பை அடக்கி, எரிச்சலை அது கட்டுப்படுத்துகிறது.



கறைகள் போவதற்கு

வெள்ளைத் துணிகளில் கறை பட்டிருந்தால், அந்த இடத்தில் பற்பசையை நன்றாகத் தேய்த்துக் கழுவினால் நல்ல ரிசல்ட் கிடைக்கும். வேறு நிறத் துணிகளுக்கும் பயன்படுத்தலாம். ஆனால் அவை ப்ளீச் ஆனது போல் ஆகிவிடும். கார்ப்பெட்டுகளில் பயன்படுத்தும் போது, பிரஷ் வைத்து நன்றாகத் தேய்க்கவும்.

ஷூக்களுக்கு

இனி உங்கள் ஷூக்களுக்கு டூத்-பேஸ்ட்டைக் கொண்டே பாலிஷ் போடலாம். அப்படியே பளபளவென ஷூக்கள் மின்னும்.



க்ரேயான் கறைகளுக்கு

சுவர்களில் க்ரேயான் கொண்டு கிறுக்காத குழந்தைகளே இருக்க முடியாது. ஈரத் துணியில் பற்பசையைத் தடவி சுவற்றில் தேய்த்தால், க்ரேயான் கிறுக்கல்கள் மறைந்துவிடும்.

வெள்ளி நகைகளுக்கு

வெள்ளி நகைகளில் சிறிது பற்பசையைத் தேய்த்து, இரவு முழுவதும் அப்படியே வைத்து விட வேண்டும். காலையில் எழுந்து அந்த நகைகளை மெல்லிய துணி கொண்டு துடைத்தால் அவை பளிச்சென்று இருக்கும்.



உஷார் முத்துக்களில் பற்பசையைத் தடவி விடக் கூடாது.

கீறல்களுக்கு

சி.டி. மற்றும் டி.வி.டிக்களில் உள்ள கீறல்களைப் போக்க வேண்டுமா? பற்பசைதான் பெஸ்ட். அதைத் தடவிக் கழுவினால் கீறல்கள் மறையும். குறிப்பு: இது நிழல் கீறல்களுக்கு மட்டுமே பொருந்தும்!

துணிகளுக்கு

துணிகளை அயர்ன் செய்யும் போதுஇ சில சமயம் இஸ்திரி பெட்டியில் துருவுடன் அதிகப்படியான சூடு இருந்தால், துணியானது சுருங்கிவிடும். இதற்கு பற்பசை தான் சிறந்த தீர்வாகும். அதில் உள்ள சிலிகா தான் இதைச் சரி செய்கிறது. எனவே துரு பிடித்த பொருட்களை டூத்பேஸ்ட் கொண்டு தேய்த்தால், துரு நீங்கிவிடும்.

 

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker