ஆரோக்கியம்புதியவை

உள்ளங்கால் அரிச்சா ஊருக்கு போக போறீங்க-ன்னு சொல்றது உண்மையா?

உள்ளங்கை அரித்தால் பணம் வரும், உள்ளங்கால் அரித்தால் ஊருக்கு போக வேண்டி வரும் என்ற மூடநம்பிக்கை நம் மக்களிடையே உள்ளது. ஒருவரது உள்ளங்கால் அரிப்பதற்கும் ஊருக்கு போவதற்கும் ஒரு சம்பந்தமும் இல்லை. உள்ளங்கால் அரிப்பதற்கு உண்மையான காரணம் வறட்சி அல்லது அளவுக்கு அதிகமாக நீரில் ஊறி இருப்பது. ஒருவேளை உள்ளங்கால் சிவந்து, துர்நாற்றம் மற்றும் வெடிப்புகளுடன், தோல் உரிந்து அசிங்கமாக காணப்பட்டால், நிலைமை சற்று மோசமாக உள்ளது என்று அர்த்தம். ஒருவருக்கு இப்படி தீவிரமான உள்ளங்கால் அரிப்பு ஏற்படுவதற்கு பூஞ்சை தொற்று கூட காரணமாக இருக்கும். இப்படி உள்ளங்காலில் தொற்றுகள் ஏற்பட்டால், அதன் விளைவாக கடுமையான அரிப்புடன், எரிச்சலையும் உண்டாக்கும். இப்படிப்பட்ட உள்ளங்கால் அரிப்பை ஒருசில எளிய இயற்கை வழிகளின் மூலம் சரிசெய்யலாம்.

இருப்பினும் தீவிரமான நிலையில் உள்ளங்கால் இருப்பின், இயற்கை வழிகளை முயற்சிக்கும் முன் மருத்துவரிடம் கேட்டுக் கொள்ளுங்கள். சரி, இப்போது கடுமையான உள்ளங்கால் அரிப்பைப் போக்கும் சில எளிய இயற்கை வழிகளைக் காண்போம்.

வினிகர் * ஒரு அகலமான சிறிய வாளியில் 3 பங்கு வெதுவெதுப்பான நீரில் 1 பங்கு வினிகர் சேர்த்து கலந்து கொள்ளுங்கள்.

* பின் அதனுள் பாதங்களை 15 நிமிடம் ஊற வைத்து, பின் கால்களை உலர்த்துங்கள். * இப்படி தினமும் இரண்டு முறை என ஒரு வாரம் தொடர்ந்து செய்து வாருங்கள். இதனால் விரைவில் உள்ளங்காலில் ஏற்பட்ட பூஞ்சைத் தொற்று நீங்கி, உள்ளங்கால் அரிப்பில் இருந்து விடுபடலாம். பூண்டு

* ஒரு பல் பூண்டு எடுத்து நன்கு தட்டிக் கொண்டு, அதில் 3-4 துளிகள் ஆலிவ் ஆயில் கலந்து கொள்ளுங்கள். * பின் அதை அரிப்புள்ள உள்ளங்காலில் தடவி 30 நிமிடம் ஊற வையுங்கள்.

* பின்பு நீரால் பாதங்களைக் கழுவுங்கள். அதிலும் பூஞ்சை எதிர்ப்பு சோப்பு கொண்டு பாதங்களைக் கழுவுவது நல்லது.

* இப்படி தினமும் ஒருமுறை செய்து வந்தால், உள்ளங்காலில் ஏற்படும் அரிப்பில் இருந்து விரைவில் விடுபடலாம். உப்பு

* ஒரு அகலமான சிறிய வாளியில், 1/4 பகுதி வெதுவெதுப்பான நீரை நிரப்பி, அத்துடன் 4 டேபிள் ஸ்பூன் உப்பு சேர்த்து, உப்பு கரையும் வரை நன்கு கலந்து கொள்ளுங்கள்.

* பின் அதில் பாதங்களை 10 நிமிடம் ஊற வைத்து, துணியால் துடையுங்கள்.

* பூஞ்சைத் தொற்றுக்களில் இருந்து விரைவில் விடுபட வேண்டுமானால், கால் விரல்களுக்கு இடையே பேக்கிங் சோடாவை தூவுங்கள்.

* இப்படி ஒரு நாளைக்கு 3-4 முறை என செய்வதால், உள்ளங்கால் அரிப்பில் இருந்து விரைவில் விடுபடலாம். தயிர்

* உள்ளங்கால் அரிப்பு உள்ளவர்கள், தயிரை உள்ளங்காலில் தடவி 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.

* பின் நீரால் கால்களைக் கழுவுங்கள். அதன் பின் துணியால் பாதங்களைத் துடையுங்கள்.

* இப்படி ஒரு நாளைக்கு 2 முறை என ஒரு வாரம் தொடர்ந்து செய்து வந்தால், உள்ளங்கால் அரிப்பை விரைவில் போக்கலாம்.

டீ-ட்ரீ ஆயில் * 100 மிலி டீ-ட்ரீ ஆயில் மற்றும் வெஜிடேபிள் ஆயிலை சரிசம அளவில் எடுத்து கலந்து கொள்ளுங்கள்.

* பின் அந்த எண்ணெயை தினமும் 2 முறை உள்ளங்காலில் தடவுங்கள். இப்படி ஒரு வாரம் தொடர்ந்து செய்து வாருங்கள். இதனால் தொல்லைமிக்க உள்ளங்கால் அரிப்பில் இருந்து விடுபடலாம்

. * இல்லாவிட்டால், 3 பகுதி டீ-ட்ரீ ஆயிலுடன், 1 பகுதி கற்றாழை ஜெல் சேர்த்து கலந்து, உள்ளங்காலில் தினமும் 2 முறை என 6-8 வாரங்கள் தொடர்ந்து பயன்படுத்துங்கள்.

பட்டை * 8-10 பட்டை துண்டை சிறு துண்டுகளாக்கிக் கொள்ளுங்கள்.

* பின் ஒரு பாத்திரத்தில் 4 கப் நீரை ஊற்றி, அதில் பட்டைத் துண்டுகளைப் போட்டு 5 நிமிடம் குறைவான தீயில் கொதிக்க விட்டு இறக்குங்கள்.

* 45 நிமிடம் கழித்து, அந்த நீரில் பாதங்களை வைத்து, குறைந்தது 1 மணிநேரம் ஊற வையுங்கள். * பின் துணியால் பாதங்களைத் துடையுங்கள்.

* இப்படி ஒரு நாளைக்கு 2 முறை என உள்ளங்கால் அரிப்பு சரியாகும் வரை செய்யுங்கள். லாவெண்டர் ஆயில்

* லாவெண்டர் ஆயில், ஆலிவ் ஆயில் போன்றவற்றை சரிசம அளவில் கலந்து, அரிப்புள்ள உள்ளங்காலில் தடவ வேண்டும். * 5-10 நிமிடம் நன்கு ஊற வைத்து, ஒரு பேப்பர் துணியால் அல்லது நீரால் பாதங்களை சுத்தம் செய்யு வேண்டும். * இந்த முறையை தினமும் தவறாமல் செய்து வந்தால், உள்ளங்கால் அரிப்பில் இருந்து விடுபடலாம். பெட்ரோலியம் ஜெல்லி

* வீட்டில் பெட்ரோலியம் ஜெல்லி உள்ளதா? இரவில் படுக்கும் முன், அரிப்பு உள்ள உள்ளங்காலில் பெட்ரோலியம் ஜெல்லியைத் தடவி, சாக்ஸ் அணிந்து கொள்ளுங்கள். * இரவு முழுவதும் நன்கு ஊற வைத்து, மறுநாள் காலையில் சாக்ஸை கழற்றுங்கள். * இப்படி தினமும் இரவு செய்து வந்தால், பாதங்கள் வறட்சியின்றி மென்மையாக இருக்கும். ஆலிவ் இலைகள் * சிறிது ஆலிவ் இலைகளை அரைத்து பேஸ்ட் செய்து கொள்ளுங்கள்.

* பின் அந்த பேஸ்ட்டை உள்ளங்காலில் தடவி 30 நிமிடம் நன்கு ஊற வையுங்கள். * பின் வெதுவெதுப்பான நீரால் பாதங்களைக் கழுவி, துணியால் பாதங்களைத் துடையுங்கள். * இப்படி ஒரு நாளைக்கு 2-3 முறை செய்து வந்தால், விரைவில் உள்ளங்கால் அரிப்பில் இருந்து விடுபடலாம். பேக்கிங் சோடா * ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் பேக்கிங் சோடா எடுத்து, நீர் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். * பின் அதை அரிப்புள்ள உள்ளங்காலில் தடவி சில நிமிடங்கள் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரால் கழுவுங்கள். * இப்படி ஒரு நாளைக்கு 2-3 முறை செய்து வந்தால், சில நாட்களில் உள்ளங்கால் அரிப்பில் இருந்து முழுமையாக விடுபடலாம். வெங்காயம் * 2 வெங்காயத்தை அரைத்து சாறு எடுத்துக் கொள்ளுங்கள்.

* பின் அதை பாதிக்கப்பட்ட உள்ளங்காலில் தடவி 1/2 மணிநேரம் நன்கு ஊற வையுங்கள். * அதன் பின் வெதுவெதுப்பான நீரால் பாதங்களைக் கழுவி, துணியால் துடையுங்கள். * அதன் பின் அவ்விடத்தில் ஈரப்பதத்தைப் போக்க ஏதேனும் பவுடரை தடவுங்கள். * இப்படி தினமும் இரண்டு முறை என தவறாமல் ஒரு மாதம் செய்து வந்தால், நல்ல பலன் கிடைக்கும்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker