சமையல் குறிப்புகள்

தீபாவளி ஸ்பெஷல்: தினை முறுக்கு

தேவையான பொருட்கள்

  • தினை – 2 கப் (வறுத்தது)
  • பொட்டுக்கடலை – 2/3 கப் (வறுத்தது)
  • உப்பு – தேவையான அளவு
  • மிளகாய்த்தூள் – ¼ தேக்கரண்டி
  • ஓமம் – 1 தேக்கரண்டி
  • கருப்பு எள் – 1 தேக்கரண்டி
  • காய்ச்சிய வெண்ணெய் – ¼ கப்
  • எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு




செய்முறை

  • தினையையும், பொட்டுக்கடலையையும் தனித்தனியாக வாணலியில் இட்டு வறுத்தெடுத்துப் பொடி செய்து சலித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
  • பின்பு இரண்டையும் கலந்து அவற்றுடன் தேவையான அளவு உப்பு, மிளகாய்த்தூள், ஓமம், கருப்பு எள் இவற்றையும் சேர்த்து கலக்கி அவற்றுடன் காய்ச்சிய வெண்ணையையும் சேர்த்து மாவை நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
  • பின்பு சிறிது சிறிதாகத் தண்ணீர் கலந்து முறுக்கு மாவை மிகவும் கெட்டியாகவோ அல்லது மிகவும் தளர்வாகவோ இல்லாத பதத்தில் பிசைந்து கொள்ள வேண்டும்.
  • பின்பு வாணலியில் எண்ணெய் ஊற்றி மிதமான தீயில் முறுக்குகளை பொரித்தெடுக்கலாம்.
  • வெண்ணெய் மற்றும் பொட்டுக்கடலை மாவு அதிகமானால் முறுக்கு சரியாக வராமல் பிரிந்து போகக்கூடும். அதுபோன்ற சமையங்களில் அதிகப்படியாக வைத்திருக்கும் தினை மாவைக் கலந்து கொண்டால் முறுக்கு மொறு மொறுப்பாக வரும்.
  • சூப்பரான தினை முறுக்கு ரெடி.



Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker