சமையல் குறிப்புகள்புதியவை
மரவள்ளிக்கிழங்கு வடை
தேவையான பொருள்கள்:
- மரவள்ளிக்கிழங்கு = 1
- புழுங்கல் அரிசி = அரை கப்
- சின்ன வெங்காயம் = 10
- பச்சை மிளகாய் = 2
- பெருங்காயத்தூள் = சிறிதளவு
- எண்ணெய் = தேவையான அளவு
- உப்பு = தேவையான அளவு
- கறிவேப்பிலை = சிறிதளவு
- கொத்தமல்லி இலை = சிறிதளவு
செய்முறை:
- அரிசியை ஊற வைக்கவும். கிழங்கை தோல் உரித்து துருவி வைத்து கொள்ளவும்.
- சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லி இலை ஆகியவற்றை பொடியாக நறுக்கி வைத்து கொள்ளவும்.
- அரிசி நன்றாக ஊறியதும் அரிசி மற்றும் துருவிய கிழங்கு இரண்டையும் மை போல தண்ணீர் சேர்க்காமல் வடை பதத்திற்கு அரைத்து கொள்ளவும்.
- பிறகு இதனுடன் நறுக்கி வைத்த கலவையை கலந்து தேவையான அளவு உப்பு மற்றும் பெருங்காயத்தூள் சேர்த்து நன்றாக பிசைந்து வைத்து கொள்ளவும்.
- வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பிசைந்து வைத்த மாவை சிறிய உருண்டையாக எடுத்து வடை போல தட்டி எண்ணெயில் போட்டு பதமாக வேக வைத்து எடுத்து பரிமாறவும்.
சூடான மரவள்ளிக்கிழங்கு வடை தயார். இதை சூடாக சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும். மிகவும் ஆரோக்கியமானது.
மருத்துவ குணங்கள்:
- மரவள்ளிக்கிழங்கில் கலோரிகள் அதிகம் காணப்படுகிறது. ஸ்டார்ச் அதிகமாக நிறைந்த உணவு. குறைந்த அளவே கொழுப்பு காணப்படுகிறது.
- புரதம், கால்சியம், இரும்பு, மெக்னீசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், காப்பர், சோடியம் மற்றும் வைட்டமின் “B”, வைட்டமின் “C”, வைட்டமின் “E” மற்றும் வைட்டமின் “K” ஆகியவை நிறைந்துள்ளது.
- மரவள்ளிக்கிழங்கு சாப்பிட்டு வந்தால் வேர்க்குரு, வாதம் மற்றும் வயிற்று கிருமிகள் குறையும். இது ஒரு கிருமி நாசினியாக உள்ளது.