சமையல் குறிப்புகள்புதியவை

கத்திரிக்காய் புலாவ்

தேவையான பொருட்கள்:

 1. கத்திரிக்காய் – 4
 2. உருளைக்கிழங்கு – 2
 3. பச்சை பட்டாணி – 1/4 கப்
 4. வெங்காயம் – 2
 5. மிளகாய் – 5
 6. சீரகம் – 1 தேக்கரண்டி
 7. சோம்பு – 1/2 தேக்கரண்டி
 8. தனியா – 1 தேக்கரண்டி
 9. வேர்க்கடலை – 2 மேஜைக்கரண்டி
 10. கொத்தமல்லி தழை – 1/2 கட்டு
 11. பெருங்காயம் – சிறிதளவு
 12. உப்பு – தேவையான அளவு
 13. பட்டை, மராட்டி மொக்கு, பிரிஞ்சி இலை, முந்திரி – தாளிக்க
 14. நல்லெண்ணெய் – 3 தேக்கரண்டி


செய்முறை:

 • எண்ணெயில்லாமல் மிளகாய், சீரகம், சோம்பு, தனியா, தோல் நீக்கிய வேர்க்கடலை ஆகியவற்றை தனித்தனியாக வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். ஆறியதும் அதனுடன் கொத்தமல்லி இலை, பெருங்காயம் சேர்த்து அரைத்துக் கொள்ளவேண்டும்.
 • அரிசியை முக்கால் பாகமாக வேக வைத்து வடித்து அதில் நல்லெண்ணெய் சேர்த்து ஆற வைக்கவேண்டும்.
 • பின்னர் கத்திரிக்காய், வெங்காயம், உருளைக்கிழங்கு ஆகியவற்றை சதுரத்துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவேண்டும்.
 • பச்சை பட்டாணியை வேகவைத்துக் கொள்ளவேண்டும்.
 • கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்தவுடன் பட்டை, மராட்டிய மொக்கு, பிரிஞ்சி இலை, முந்திரி ஆகியவற்றை போட்டு தாளிக்கவேண்டும்.
 • தாளித்ததுடன் கத்திரிக்காய், வெங்காயம், உருளைக்கிழங்கு ஆகியவற்றை சேர்த்து வதக்க வேண்டும். காய்கறிகள் அதிகமாக வதங்காமல் உப்பு சேர்த்து வதக்கவேண்டும் (காய்கறிகள் அதிகமாக குழைய கூடாது).
 • காய்கறிகள் வெந்தவுடன் அரைத்து வைத்துள்ள பொடியிலிருந்து நான்கு தேக்கரண்டி பொடி, வேகவைத்த பட்டாணிஆகியவற்றை காய்கறிகளுடன் கலந்துவிடவேண்டும். பொடி காய்கறிகளில் நன்றாக கலந்ததும் ஆறிய சாதத்தை சேர்த்து நன்றாக கிளறி தீயை குறைத்து வைத்து மூடி விட வேண்டும்.
 • ஐந்து நிமிடம் கழித்து கொத்தமல்லி தழையை நறுக்கி கிளறிய சாதத்தில் தூவி பரிமாறவேண்டும்.
 • இப்பொழுது சுவையான சத்தான கத்திரிக்காய் புலாவ் ரெடி.


மருத்துவ பயன்கள்:

 1. கத்திரிக்காயில் வைட்டமின் சி, மற்றும் இரும்புச் சத்து உள்ளது. கத்திரிக்காய் நரம்புகளுக்கு வலுவூட்டவும்,  சளி, இருமலைக் குறைக்கவும் செய்கிறது.
 2. உருளைக்கிழங்கில் வைட்டமின் சி, பி6, பி3, பி1, பி2, தாதுஉப்புக்கள், நார்ச்சத்து, பொட்டசியம் ஆகிய சத்துக்கள் அதிகமாக காணப்படுகிறது.
 3. உருளைக்கிழங்கு சாறு வயிற்றுப்புண், வயிற்று கோளாறுகள், குடல் கோளாறுகள், இரப்பை கோளாறுகள் ஆகியவற்றை குறையச் செய்யும்.
 4. உடலிலுள்ள அதிகப்படியான கொழுப்புகளை கரைய செய்து ரத்தத்தை சுத்திகரிப்பதில் வெங்காயத்தின் நறுமணம், அமிலத் தன்மை பெரும் பங்கு வகிக்கிறது. நாம் உண்ணும் உணவை எளிதில் ஜீரணிக்க செய்கிறது.
 5. பச்சை வெங்காயத்தை உணவில் சோ்த்துக் கொண்டால் உடலிலுள்ள நோய்கிருமிகளை அழித்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்கிறது.
 6. பச்சை வெங்காயத்தின் அமிலத்தன்மை மாரடைப்பு நோயிலிருந்து பாதுகாக்கிறது.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker