கருப்பு நிற டைல்ஸை எப்படி சுத்தம் செய்யணும்?… என்ன பண்ணினா புதுசு போலவே இருக்கும்…
சுத்தம் சோறு போடும் என்ற பழமொழி உண்டு. இதற்கு ஏற்றார்போல் வீடுகளை சுத்தமாக வைத்துக் கொள்வது என்பதே ஒரு கலை தான்.
பல லட்ச ரூபாய்களை செலவு செய்து வீட்டின் வெளித் தோற்றத்தையும், உள் அலங்கார வேலைப்பாடுகளை செய்தால் மட்டும் போதாது. அவற்றை தொடர்ந்து சுத்தமாக வைத்துக் கொள்வதில் தான் வீட்டின் உண்மையான அழகு வெளிப்படும்.
தரை சுத்தம் செய்தல்
குறிப்பாக தரை சுத்தம் என்பது முக்கியமான விஷயம். வீட்டிற்கு வரும் விருந்தாளிகள் கண்களில் முதலில் படுவது தரையாக தான் இருக்கும். அது கால் வைக்கவே கூசும் அளவுக்கு அசுத்தமாக இருக்க விடலாமா?. இதோ தரையில் உள்ள கருப்பு நிற டைல்ஸ்களை பளபளப்பாக மின்னச் செய்வது எப்படி? என்ற கேள்விக்கு பதில் உள்ளது.
கருப்பு நிற டைல்ஸ்
சமையலறை மற்றும் பாத்ரூமில் பதிக்கப்பட்டுள்ள கருப்பு நிற டைல்ஸ்களை சுத்தம் செய்ய தனித்தனி வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். பாத்ரூம் டைல்ஸ்களை ரசாயன திரவங்களை பயன்படுத்தி வாரம் ஒரு முறை சுத்தம் செய்யலாம். ஆனால், இதற்கு வினீகரும், தண்ணீரும் கலந்த திரவமும் நல்ல பயனளிக்கும். சமையலறையில் எண்ணெய் பிசுபிசுப்பு அடைந்து டைலஸ்களின் நிறம் மங்கலாக காணப்படும். சுத்தம் செய்த ஒரு சில நாட்களில் மீண்டும் எண்ணெய் பிசுபிசுப்பு தொற்றிக் கொள்ளும். இவை தொடர்ந்து பளபளப்பாக இருக்க ஆலோசகள் இங்கே கொடுக்கப்படுகிறது. இது தரையில் பதிக்கப்பட்டுள்ள டைல்ஸ்களுக்கு மட்டுமின்றி, சுவற்றில் பதிக்கப்பட்டுள்ள டைல்ஸ்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
வினீகர் மற்றும் தண்ணீர் திரவம்
இந்த முறையை பயன்படுத்தி பாருங்கள். இதர டைல்ஸ்களை கருப்பு நிற டைல்ஸ்கள் தான் விரைந்து நிறம் மங்கும். பளபளப்பை இழந்தால் டைல்ஸ்கள் அவ்வளவு சிறப்பாக பார்வைக்கு இருக்காது. ஒரு கப் வினீகரை ஒரு வாலி தண்ணீரில் கலக்க வேண்டும். தரையில் தொடர்ந்து மாப் போட வேண்டும். இது நி ச்சயம் பளபளப்பான தரையை ஏற்படுத்திக் கொடுக்கும்.
எலுமிச்சை மற்றும் தண்ணீர்
விருந்தாளிகள் வர இருப்பதால் நீங்கள் உங்களது தரையை விரைந்து சுத்தப்படுத்த வேண்டுமா?. இதை முயற்சி செய்யுங்கள். எலுமிச்சை பழத்தை வெட்டி அதன் சாறை ஒரு வாலி தண்ணீருடன் கலந்து கொள்ளுங்கள். பின்னர் தண்ணீரை நன்றாக கலக்கி தரைக்கு மாப் போடுங்கள். இது அழுக்கை சுத்தம் செய்து மின்னச் செய்வதோடு, தரையில் இருந்த கறைகளையும் முற்றிலும் அகற்றிவிடும்.
ஃபேப்ரிக் சாப்டனர் மற்றும் தண்ணீர்
கருப்பு நிற தரையை பளபளப்பாக மாற்ற இந்த முறையை பயன்படுத்தலாம். இந்த முறையை பயன்ப டுத்தும் போது திரவத்தை தரையில் விட்டுவிடக் கூடாது. அவ்வாறு செய்தால் ஆங்காங்கே சங்கடத்தை ஏற்படுத்தும் வகையிலான கரைகளை ஏற்படுத்திவிடும். அதனால் மாப் குச்சியின் தலைப்பகுதியை இறுக்கமாக திருகிக் கொண்டு மாப் போட வேண்டும்.
அமோனியா
ஒரு வாலி நிறைய தண்ணீர் எடுத்துக் கொண்டு அதில் ஒரு கப் அமோனியாவை சேர்த்துக் கொள்ளுங்கள். இரண்டையும் நன்றாக கலக்க வேண்டும். இந்த திரவத்தை பயன்படுத்தி தரையை சுத்தம் செய்யுங்கள். அமோனியா ஒரு வலுவான நறுமனம் கொண்டது. அதனால் இதன் மூலம் மாப் செய்யும் போது ஜன்னல்களை திறந்து வைக்க வேண்டும். அறைகளில் காற்றோட்ட வசதி இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
தரைகளுக்கு சீல் வைத்தல்
பல இன்டீரியர் டெக்கரேட்டர்கள் தற்போது இந்த முறையை பரிந்துரை செய்கிறார். பெயின்ட் போன்ற திரவத்தை தரைக்கு பூசி சீல் வைத்து விடுவார்கள். இதன் மூலம் நீங்கள் தரைக்கு தொடர்ந்து மாப் போட வேண்டிய அவசியம் கிடையாது. இந்த திரவம் எண்ணைய் மற்றும் இதர தூசி, அழுக்குகளை உள் இழுத்துக் கொள்ளும். இதனால் கறுப்பு தரைகள் சுத்தமாக வைத்திருக்க உதவும்.
ஆல்கஹால் கலவை
கருப்பு நிற டைல்ஸ்களை சுத்தம் செய்ய தேய்க்கும் ஆல்கஹாலை பயன்படுத்தலாம். ஒரு வாலி தண்ணீருடன் ஒரு டேபிள் ஸ்பூன் ஆல்கஹாலை கலந்து கொள்ளுங்கள். பின்னர் இதை நன்றாக கலக்கி தரைக்கு மாப் போடுங்கள். அதன் பின்னர் தரையை நன்றாக காய வைத்துவிடுங்கள்.
வெந்நீர் மற்றும் சோப் திரவம்
கருப்பு நிற மார்பில் உங்கள் வீட்டில் இருந்தால் ஆசிட் தன்மை கொண்ட எந்த திரவத்தையும் பயன்படுத்தாதீர்கள். அது தரையை சேதப்படுத்திவிடும். வெண்ணீர் மற்றும் பாத்திரம் கழுவும் சோப் மட்டுமே போதுமானது. வெண்ணீரையும், சோப்பையும் பயன்படுத்தி தயாரிக்கப்படும் திரவம் மூலம் உங்களை வீட்டு தரை சுத்தமாகவும், பளபளப்பாகவும் மாறிவிடும்.
அதனால் இந்த வழிமுறைகளை பயன்படுத்தி உங்களது வீட்டின் தரைகளை சுத்தம் செய்து விருந்தாளிகளிடம் சபாஷ் பெற்று மகிழுங்கள்.