ஃபேஷன்அழகு..அழகு..புதியவை

ஏய்..! நீ ரொம்ப அழகா இருக்க..!! #ஸ்பெக்ஸ் மனிதர்கள்…!!!

ஸ்பெக்ஸ்….!! முன்பெல்லாம் கண்ணாடிகளை கண்களில் ஏதாவது பிரச்சனைகள் இருந்தால்தான் அணிவார்கள்.ஆனால் இப்போதெல்லாம் அப்படி இல்லை. யாரு வேண்டுமானாலும் இந்த கண்ணாடிகளை அணியலாம். ஏன் …இதை ஒரு பேஷன் என்றே கூறலாம்…! கண்ணாடி போடாதவரை விட கண்ணாடி போட்டவரையே நமக்கு மிகவும் பிடித்தும் விடுகிறது. உளவியல் ரீதியாகவும் இப்படித்தான் கூறுகிறார்கள்.கண்ணாடி அணிவதே தனி அழகுதான் போல..!! கண்ணாடி அணிந்தவரை பார்த்தால் மிகவும் மென்மையானவர்கள் போன்றும்,சாந்தமானவர்கள் போன்றும் , படிப்பாளிகள் போன்றும் நமக்கு தோன்றுவது வழக்கமே. இதில் குறிப்பாக “படிப்ஸ் ” என்றே அதிகம் அழைக்கிறார்கள் கண்ணாடி போட்டவர்களை..”

கண்ணாடிகளை தேர்வு செய்வதற்கு பல வழி முறைகள் இருக்கின்றது.சிலர் வட்டமான முகம் கொண்டவராக இருப்பார்கள்,சிலர் நீண்ட முக வடிவம் கொண்டவராக இருப்பார்கள்,மேலும் சில வெவ்வேறு முக வடிவம் உள்ளவராக இருக்க கூடும். அந்தந்த முக வடிவத்துக்கு ஏற்ப கண்ணாடிகளை அணிவதே அழகு.இதோ உங்களுக்காக எவ்வாறு கண்ணாடிகளை தேர்வு செய்ய வேண்டும் என்பதை பார்ப்போம். பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

#1 .சதுர முகம் இந்த சதுர முகம் கொண்டவர்களின் முக அமைப்பானது, பரந்த, ஆழமான நெற்றிகளை கொண்டதாக இருக்கும்.அத்துடன் தாடையும் பரந்து காணப்படும்.எனவே இவர்களுக்கு சற்று வித்தியாசமான ஃபிரமேஸ்களே சரியாக இருக்கும். முட்டை வடிவ கண்ணாடிகள் இவர்களுக்கு மிக எடுப்பாக இருக்கும்.மேலும் இது அவர்களை நீண்ட மென்மையான முகம் கொண்டவராக பிரதிபலிக்கும். மிகவும் தட்டையான முனைகளுடன், மென்மையாக இருக்கும் கண்ணாடிகளை அணிந்தால் அது அவர்களின் மூக்கு பகுதியை அழகாக எடுத்து காட்டும்.

#2 நீண்ட முகம் நீண்ட முகம் உடையவர்கள் பொதுவாகவே நீண்ட தாடை அமைப்பை கொண்டவர்களாக இருப்பர். மிகவும் மெல்லிய ஃபிரேம்களை கொண்ட தட்டையான கண்ணாடிகளை அணிந்தால் அழகோ அழகுதான்..!! இந்த தட்டையான கண்ணாடிகள், அவர்கள் முகத்தை பார்ப்பதற்கு குறுகிய மற்றும் சின்ன முகமாக தோன்றக்கூடிய பிம்பத்தை கொடுக்கும். மேலும் ஸ்பெக்ஸ் பார்ப்பதற்கு சிறிய அளவில்,அதிக டிசைன்களுடன் இருந்தால் இன்னும் அழகை கூட்டி கொடுக்கும். குகையில் 18 நாட்கள் என்ன நடந்து? மீட்கப்பட்டவர்களின் சுவாரஸ்ய தகவல்கள்!! உங்கள் வீட்டு சமையல் அறையில் மறைந்துள்ள 8 மருத்துவ ரகசியங்களும் அதன் பயன்களும். இரட்டை குழந்தை பெற்றுக்கொள்வதில் இருக்கும் சவால்களும், அதன் தீர்வுகளும்

#3 வட்ட வடிவ முகம் மிக அழகான கன்னங்களை கொண்டவர்கள் இந்த வட்ட வடிவத்து முகம் உள்ளவர்கள்.பார்ப்பதற்கு சாந்தமான முக பாவனைகளை இவர்கள் வைத்திருப்பார்கள். மேலும் பரந்த நெற்றியும் அழகான தாடை அமைப்பையும் கொண்டவர்கள் இவர்கள்.எனவே, இவர்களுக்கு மிக தட்டையான மெல்லிய வட்டமற்ற வடிவ கண்ணாடிகள் அட்டகாசமாக இருக்கும். செவ்வக வடிவ ஃபிரேம்ஸ் மேலும் இவர்களுக்கு அழகை கூட்டி கொடுக்கும்.

#4 ஹார்ட் வடிவ முகம் ஹார்ட் வடிவ முகம் உடையவர்கள் பரந்த நெற்றியுடனும்,அகண்ட கன்னத்துடனும்,குறுகிய தாடையுடனும் இருப்பார்கள். இவர்களுக்கு மெல்லிய ஒளி வண்ண கண்ணாடிகள் பார்க்க அழகாக இருக்கும்.ஏனென்றால் அவை அவர்களின் குறுகிய தடையை சிறிது நீட்டமாக எடுத்துக்காட்டும். மேலும் செமி-ரும்டு கண்ணாடிகளும் இவர்களின் முகங்களுக்கு பொருத்தமாக இருக்கும்.

#5 முட்டை வடிவ முகம் இந்த முட்டை வடிவ முக அமைப்பை கொண்டவர்கள் இயல்பாகவே அனைத்து வகையான கண்ணாடிகளும் பொருந்துபவராக இருப்பார்கள். இவர்களின் முகமானது முட்டை வடிவத்தில் நீண்ட தாடை கொண்டவராக இருப்பார்கள். கன்னமும் புசு புசுவென்று காணப்படும். இவர்களுக்கு ‘ கேட் ஐ ” வடிவ கண்ணாடிகள் மிக கச்சிதமாக இருக்கும்.ஏற்கனவே அழகாக இருந்த அவர்களின் முகத்தை இன்னும் அழகாக மாற்றிவிடுகிறது இந்த வகை கண்ணாடிகள்.

#6 வைர வடிவ முகம் கண்கள் பொதுவாகவே இந்த வைர வடிவ முகம் உடையவர்களுக்கு குறுகிய அமைப்பாகவே இருக்கும். மேலும் அகண்ட கன்னமும் குறுகிய தாடையும் இவர்களின் முக அமைப்பாகும். டீடைல்ட்டு ஃபிரேம்ஸ்,ரிம்லெஸ் ஃபிரேம்ஸ்,கேட் ஐ ஃபிரேம்ஸ் போன்றவை இந்த முக அமைப்பு கொண்டவர்களுக்கு எடுப்பாக இருக்கும்.

#7 முக்கோண வடிவ கண்ணாடிகள் இவர்களின் முக அமைப்பும் ஹார்ட் வடிவ முகம் கொண்டவர் போல் தான் இருக்கும். ஆனால் சிறிய கன்னங்கள் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்களின் நெற்றியானது நீண்டு காணப்படும்.மேல் புற முகமானது சின்னதாக தெரியும்.இவர்களுக்கு நீண்ட ஃபிரேம்களை உடைய கண்ணாடிகள் மிக அற்புதமாக இருக்கும். அத்துடன் லைட் கலர் ஃபிரேம்களும்,ரிம்லெஸ் ஃபிரேம்களும் முக்கோண வடிவ முகம் உடையவர்களுக்கு அட்டகாசமாக இருக்கும்.

#8 செவ்வக வடிவ முகம் அகன்ற நெற்றியும், நீண்ட கன்னத்தையும் வட்டமான தாடை அமைப்பையும் கொண்டவர்கள் இவர்கள். மேலும் முகம் பார்ப்பதற்கு நீட்டமாக இருக்கும். இந்த முக அமைப்பை கொண்டவர்களுக்கு நீண்ட ஃபிரேம்ஸ்களை உடைய கண்ணாடிகளை அணிந்தால் பிரமாதமாக இருக்கும்.இந்த ஃபிரேம்ஸ் அவர்களில் நீண்ட முகத்தை சீரானதாக எடுத்து காட்டும். செய்யகூடாதவை:- # வட்ட வடிவ முகத்துக்காரர்களா நீங்கள்…? நிச்சயம் வட்டவடிவ ஃபிரேம்ஸ்கள் கொண்ட கண்ணாடிகளை நீங்கள் அணிய வேண்டாம்.

# சதுரவடிவ முகம் கொண்டவர்கள், தட்டையான கூர்மையான முனைகள் கொண்ட ஃபிரேம்ஸ்கள் அணிந்தால் இவர்களின் தோற்றத்தை கெடுத்துவிடும். #முட்டை வடிவ முகத்தவர்களுக்கு கிட்டத்தட்ட அனைத்து விதமான ஃபிரேம்ஸ்களும் பொருந்தும். இருப்பினும் இவர்கள் மிக சிறிய அல்லது மிக பெரிய ஃபிரேம்ஸ்களை அணிவதை தவிர்க்க வேண்டும். # செவ்வக வடிவ முகம் உள்ளவர்கள் சிறிய செவ்வக வடிவ ஃபிரேம்ஸ்களை அணிவதை தவிர்க்க வேண்டும்.இஃது அவர்களின் முகத்துக்கு எடுப்பாக இருக்காது. # ஹார்ட் அல்லது முக்கோண வடிவ முகம் உள்ளவர்கள் ,நீண்ட முனைகள் கொண்ட ஃபிரேம்ஸ்களை அணிந்தால் அவர்கள் முக அமைப்பிற்கு அது ஏற்றதாக இருக்காது.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker