மீன் வறுவல்
தேவையான பொருட்கள் :
முள்நீக்கிய மீன்
சிறியதாக வெட்டிய வெங்காயம்
சிறியதாக வெட்டிய பச்சை மிளகாய்
தேங்காய்ப்பூ
நற்சீரக பொடி
கறிமிளகாய்த்தூள்
மிளகுதூள்
நல்லெண்ணை
உப்பு
செய்முறை :
மீனை பாத்திரத்தில் இட்டு, அளவாகத் தண்ணீர் விட்டு நீர் சுண்டும் வரை அவித்தெடுத்து ஆறிய பின்பு முள்நீக்கி நன்றாகப்பிசைந்து உதிர்த்தி வைத்துக்கொள்க. இறால் ஆயின் மிகச் சிறிய துண்டுகளாக வெட்டி வைத்துக்கொள்க.
பின்பு பிசைந்த மீனில் மிளகாய்த்தூள், மிளகுதூள், நற்சீரக பொடி, தேங்காய்ப்பூ, அளவிற்கு உப்புத்தூள் என்பவற்றை இட்டு நன்றாக பிசைந்து வைத்து கொள்க.
பின்பு தாச்சியில் நல்லெண்ணையை விட்டு காய்ந்த பின்பு வெட்டிய வெங்காயம், மிளகாய் என்பவற்றை இட்டு மூடி வதங்க விடவும். இவை அரைப்பதமாக வதங்கிய பின்பு பிசைந்து வைத்துள்ள மீன் கலவையை கொட்டி இடைவிடாது வறுக்கவும். மீன்கலவை நன்றாக வறுபட்டு உதிரத் தொடங்கியதும் இறக்கிச் சோறு, பிட்டு என்பவற்றுடன் பரிமாறலாம்.
This is something that will need all of our combined efforts to address.
How long does it take you to write an article like this?
When are you going to post again? You really entertain me!
You have some helpful ideas! Maybe I should consider doing this by myself.