தாய்மை-குழந்தை பராமரிப்புபுதியவை

குழந்தைகள் காலை உணவை சாப்பிட வைப்பது எப்படி?

குழந்தைகள் காலை உணவை சாப்பிட வைப்பது எப்படி?

95 சதவீத குழந்தைகள் சத்தான உணவை எடுத்துக் கொள்வதில்லை என்கிறது ஒரு புள்ளி விவரம். பாதி குழந்தைகள் காலை உணவில் கவனம் செலுத்துவதில்லை என்கிறார்கள் மருத்துவர்கள்.

சத்தான காலை உணவே குழந்தைகளின் நினைவுத்திறன், எச்சரிக்கை உணர்வு, மன ஒருமைப்பாடு, சாதுரிய மனப்பான்மைக்கு உதவியாக இருக்கும். நிம்மதியாக சாப்பிட்டு மனநிறைவுடன் பள்ளிக்கு கிளம்புபவர்கள் மகிழ்ச்சியான மனநிலையுடன் எதையும் எதிர்கொள்வார்கள்.


அடிக்கடி காலை உணவை சாப்பிடாமல் கிளம்புபவர்களுக்கு வயிற்றில் சுரக்கும் ஜீரண திரவங்களால் வயிற்றில் புண் ஏற்பட்டு, ‘அல்சர்’ எனும் தீராத வயிற்றுவலி பிரச்சினையாக மாற வாய்ப்பு உண்டு.

குழந்தைகள் சரியாக சாப்பிட்டு மகிழ்ச்சியாக பள்ளி செல்வது பெற்றோரின் கைகளில்தான் உள்ளது.

சிறுகுழந்தைகள் பலர் சாப்பிட அடம் பிடிப்பார்கள். அவர்களை சாப்பிட வைக்க, அவர்களின் சொந்த விருப்பத்தின்படி உணவுகளை தயார் செய்து கொடுக்க வேண்டும். கடைக்கு அழைத்துச் சென்று அவர்களையே காய்கறியைத் தேர்வு செய்யச் சொல்லுங்கள். ஒவ்வொரு காயிலும் என்ன சத்து இருக்கிறது என்பதைச் சொல்லுங்கள். காய்கறி குறித்து குழந்தை கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லத் தயாராக இருங்கள். சமைக்கும்போது சின்னச் சின்ன வேலைகள் செய்ய குழந்தைகளை அனுமதியுங்கள். இது சாப்பிடும் ஆர்வத்தை ஏற்படுத்தும்.

வழக்கமான இட்லி, தோசை, சாதம் போன்றவற்றுக்குப் பதிலாக, குழந்தைக்குப் பிடித்த உணவு வகைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கலாம். இவற்றுக்குப் பதிலாக பால், காய்கறி, பழங்கள், கீரைகள், பருப்புகள், தேன், முந்திரி, பாதாம், திராட்சை, முட்டை சேர்த்து விதவிதமான உணவுகள் தயாரித்து கொடுக்கலாம்.

சாப்பிடும்போது பெற்றோரும் இணைந்துகொண்டால் போட்டி போட்டு சாப்பிட்டு சுவாரஸ்யத்தை ஏற்படுத்தலாம்.

பள்ளிக்கான தயாரிப்புகளை இரவே முடித்து விடுங்கள். குழந்தைகளின் வேலையை அவர்களே செய்ய வாய்ப்பளியுங்கள்.


தொலைக்காட்சி பார்க்கும், ஸ்மார்ட்போனில் விளையாடும் நேரத்தைக் குறைத்து, அவர்களுடன் பேசவும், விளையாடவும் நேரம் ஒதுக்குங்கள்.

பசித்த வயிறும், அழுத கண்களுமாக பிள்ளைகள் பள்ளிக்கு செல்வதை மாற்றி, சத்தான சாப்பாடு, சிரித்த முகமாக அவர்கள் பள்ளி சென்று திரும்ப அக்கறை காட்டுங்கள்!

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker