அழகு..அழகு..புதியவை

ஆண்களுக்கான ஷேவிங் க்ரீம் வீட்டிலேயே தயாரிக்கலாம்

பரபரப்பான வேலை சூழலுக்கு மத்தியில் தங்கள் அழகை பராமரிக்க நேரம் இல்லையே என கவலைப்படும் ஆண்களுக்கும் மற்றும் ஷேவிங் க்ரிம் வாங்கியே காசு கரியாகுது என்று கவலைப்படும் இளைஞர்களுக்குமான ஸ்பெஷல் தொகுப்பு இது. ப்யூட்டி ப்ராடெக்ட்களை எளிதாக நாம் வீட்டிலேயே தயாரிக்கலாம் (men beauty tips). அதில் கெமிக்கல் இருக்குமோ அதனால் நமக்கு ஏதேனும் பாதிப்பு வந்திடுமோ என்று பயமில்லாமல் பயன்படுத்தலாம். அத்துடன்உங்கள் அழகுக்கு நாங்கள் பொறுப்பு.

ஸ்கின் டோனர் :

இது சருமத்தை சுத்தமாக பரமாரிக்க உதவும். சிறந்த டோனர் என்பது நம் சருமத்தை ஈரப்பசையுடனும்.ஆரோக்கியமாகவும் வைத்திருக்கும். இதற்கு கற்றாழை ஜெல் பயன்படுத்தலாம். கற்றாழையை இரண்டாக பிரித்தால் உள்ளே ஜெல் கிடைக்கும். அதை அப்படியே முகத்தில் அப்ளை செய்து 10 நிமிடம் கழித்து முகத்தை கழுவினால் ஆரோக்கியமான சருமம் கிடைத்திடும்.

 

 

 

 

 

 

 

 

வேக்ஸ் :

உடலில் தேவையற்ற பகுதிகளில் வளர்ந்திருக்கும் முடிகளை அகற்ற வேக்ஸ் பயன்படுத்துவார்கள் இதனை நீங்கள் வீட்டிலேயே தயார் செய்யலாம். இரண்டரை கப் – சர்க்கரை (நைசாக அரைத்தது) ஒன்றரை கப் – எலுமிச்சை சாறு இரண்டு கப் – தண்ணீர் இவை எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து சிறிது நேரம் நன்றாக கொதிக்க விடுங்கள். 10 நிமிடங்களில் கோல்டன் பிரவுன் நிறத்திற்கு வந்துவிடும். பின்னர் அதனை நன்றாக ஆறவைத்தால் மெழுகைப் போல ஸ்டிக்கியாக இருக்கும். இதனை வழக்கமாக பயன்படுத்தும் வேக்ஸ் போல வேக்ஸிங் செய்யலாம்.

 

இன்ஸ்டென்ட் பேஷியல் :

வேகமாகவும் அதே நேரத்தில் இயற்கையான பேஷியல் செய்ய நினைப்பவர்களுக்கான டிப்ஸ் இது! சுத்தமாக முகத்தை கழுவிய பிறகு முகத்தை தேனால் மாஸ்க் போல அப்ளை செய்து கொள்ளுங்கள். பின்னர் ஆவி பிடிக்க வேண்டும். பின்னர் 20 நிமிடங்கள் வரை மசாஜ் செய்யுங்கள். 20 நிமிடங்கள் கழித்து சூடான நீரில் முகத்தை கழுவலாம் அல்லது சூடான நீர் மற்றும் சாதாரண நீர் என வெவ்வேறு டெம்ப்பரேச்சர் நீரைக் கொண்டு முகத்தை கழுவலாம்.

ஃபோமிங்க் ஷேவ் ஷோப் :

இதனை தயாரிக்க குறைந்த அளவே செலவாகும் அதே நேரத்தில் நல்ல பலம் கிடைக்கும்.

கற்றாழை ஜெல் – முக்கால் கப்

லிக்விட் கேஸ்டைல் சோப் – முக்கால் கப்

ஆலிவ் ஆயில் அல்லது பாதாம் எண்ணெய் – ஒரு டேபிள் ஸ்பூன்

டிஸ்டில்ட் வாட்டர் – முக்கால் கப்

விட்டமின் ஈ எக்ஸ்ட்ராக்ட் – ஒரு டீஸ்ப்பூன்

வாசனை ஏதேனும் வேண்டுமென்றால் அதற்கான எக்ஸ்ட்ராக்ட் ஒரு டீ ஸ்பூன் ஃபோமிங் சோப் பாட்டில் – ஒன்று மேலே சொல்லப்பட்டுள்ள தேவையான பொருட்களை எல்லாம் ஒன்றாக கலந்து அதனை ஃபோமிங் பாட்டிலில் வைத்திடுங்கள். ஒவ்வொரு முறை பயன்படுத்தும் போதும் நன்றாக குலுக்கிய பிறகு பயன்படுத்தவும். ஒரு மாதம் வரை இதனை பயன்படுத்தலாம்.

ஷேவ் க்ரீம் :

ஆலிவ் ஆயில்,பாதாம் எண்ணெய், தேங்காய் எண்ணெய் – முக்கால் கப், கோக்கோ பட்டர் – மூன்று டேபிள் ஸ்பூன், கற்றாழை ஜெல் – முக்கல் கப் (கற்றாழை கிடைக்காத பட்சத்தில் தேன் பயன்படுத்தலாம்), காஸ்மட்டிக் க்ளே – 1 டேபிள் ஸ்பூன் பேக்கிங், சோடா – 2 டேபிள் ஸ்பூன், லிக்விட் கேஸ்டில் சோப் – முக்கால் கப், விட்டமின் ஈ எக்ஸ்ட்ராக்ட் – மூன்று டேபிள் ஸ்பூன்

செய்முறை : முதலில் கோக்கோ பட்டரை டபுள் பாய்லிங் முறையில் சூடாக்கி உருக்கிடவும். பின்னர் அதனை குளிரவைத்து அதில் மற்ற பொருட்களை எல்லாம் ஒன்றாக சேர்த்து நன்றாக கிளறவும். நன்றாக கலந்ததும் அதனை ஒரு ஜாரில் எடுத்து வைத்துவிடுங்கள். இந்த ஷேவிங் க்ரீமை இரண்டு மாதங்கள் வரை பயன்படுத்தலாம்.

பார் ஷேவ் ஷோப் :

சோப் பார் – 1 (ஆர்கானிக் கடைகளில் வெறும் சோப் கட்டி கிடைக்கும்), ஆலிவ் ஆயில், பாதாம் எண்ணெய், கற்றாழை ஜெல் இவற்றில் ஏதேனும் ஒன்று ஒரு டேபிள் ஸ்பூன் காஸ்மட்டிக் க்ளே அல்லது வொயிட் க்ளே – இரண்டு டேபிள் ஸ்பூன்

 

 

 

 

செய்முறை : சோப்பை முதலில் சூடேற்றி உருக்குங்கள். இதற்கு கொஞ்சம் கால தாமதம் ஆகும். சோப் பார் நன்றாக மெல்ட் ஆனதும் அதில் காஸ்மட்டிக் க்ளே அல்லது வொயிட் க்ளே சேர்த்து நன்றாக கிளறுங்கள். இரண்டும் ஒன்றாக கலந்ததும் ஆலிவ் ஆயில் ஊற்றி கலக்குங்கள். சூடாக இருக்கும் போதே உங்களுக்கு தேவையான வடிவத்தில் இதனை ஊற்றி வைத்திட்டால் குளிர்ந்ததும் ஷேவிங் சோப் பயன்படுத்தலாம்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker