புதியவைமருத்துவம்

இதய நோயின் முக்கியமான அறிகுறிகள்

இன்றைய நவீன உலகில் மக்களுக்கு அதிகமான பாதிப்புகளையும் மரணத்தையும் உண்டாக்குகின்ற நோய்களில் முன்னணியில் இருப்பது இதய நோயாகும் (heart disease). இதற்கு முக்கிய காரணம் இருதய நோயின் அறிகுறிகள் பற்றி மக்களின் அறியாமையேயாகும். பல நேரங்களில் இருதய நோயின் heart disease அறிகுறிகளை அலட்சியப்படுத்துவதனாலேயே மரணம் ஏற்படுகின்றது. எனவே அனைவரும் இருதய நோயின் அறிகுறிகள் பற்றி அறிந்திருப்பது அவசியமாகும்

நெஞ்சு வலி (heart disease)

இருதய நோயின் பிரதான அறிகுறி நெஞ்சு வலியாகும் இது மார்பின் நடுப்பகுதியிலோ அல்லது சற்று இடப்புறமாகவோ இருக்கும். நெஞ்சின்மீது ஒரு பாராங்கல்லைத் தூக்கி வைத்ததுபோல் இருக்கும். சில நேரங்களில் எரிச்சல் போலவும் இருக்கலாம்.

பலருக்கு நெஞ்சு வலி ஒரு சிறிய நெருடல் (DISCOMFORT) போல இருக்கும்.இந்த வலி இடது தோள் இடது கை வயிற்றின் மேல் பகுதி தாடை சில நேரங்களில் வலப்புற மார்பிலும் உணரப்படும். பொதுவாக இருதய வலி STRAIN மூலமாகவும் உடல் வருந்த வேலை செய்வதாலும் உண்டாகும். ஓய்வெடுத்தால் உடன் வலி நின்றுவிடும்.

பல நேரங்களில் இந்த வலி வயிற்றுக் கோளாறினாலோ அல்லது அஜீரணத்தினாலோ உண்டானதென தவறாக எண்ணப்பட்டு உயிரிழப்புக்கு ஆளாக நேரிடுகிறது. எனவே நெஞ்சு வலியை அலட்சியப்படுத்தாதீர்கள்

மூச்சுத்திணறல்
இதுவும் ஒரு முக்கியமான அறிகுறியாகும். மூச்சுத்திணறல், சுவாச நோய்கள் காரணமாக வரலாம் அல்லது இருதய நோய் காரணமாகவும் வரலாம்.அவைகளை சரியாக வேறுபடுத்தி அறிந்தால்தான் முறையான சிகிச்சை அளித்து உயிரைக் காப்பாற்ற முடியும

 

 

 

 

 

இருமல்
இருமல் ஒரு சாதாரண அறிகுறியாகத் தோன்றினாலும் இதுவும் ஒரு முக்கியமான அறிகுறியாகும். பல காரணங்களாலும் நோய்களாலும் இருமல் வரலாம். இருதய நோய் உள்ளவர்களுக்கு நுறையீரலில் நீர் கட்டிக்கொள்ளுவதால் இருமலும் மூச்சுத்திணரலும் உண்டாகின்றன

மயக்கம்
மயக்கம், தலைசுற்றல் போன்றவையும் நினைவிழத்தலும் சாதாரணமாக வரக்கூடும்

சோர்வு (FATIGUE)
காரணமில்லாத உடல் சோர்வு உண்டாகும். இது முக்கியமான உறுப்புகளுக்கு இரத்த ஓட்டம் தடைப்படுவதாலோ குறைவதாலோ உண்டாகின்றது.

வாந்தி பிரட்டல் (NAUSEA/ VOMITTING)
வாந்தி அல்லது வயிற்று பிரட்டல், வயிறு உப்பல் போன்றவை நீர் தங்குதலின் காரணமாக உண்டாகும்

மற்ற இடங்களில் வலி
முன்பே சொன்னது போல நடு நெஞ்சிலோ இடப்புற நெஞ்சிலோ மட்டுமல்லாது வலி மார்பின் வலப்புறம் நடு வயிற்றின் மேல் பகுதி இடது தோள் இடது மேற்கை இடதுபுற முதுகு தாடைகள் ஆகிய இடங்களிலும் வரலாம்

படபடப்பு (PALPITATION)
இருதய நோய் உள்ளவர்களுக்கு படபடப்பு, இதயம் அதிகமாகவும் வேகமாகவும் துடிப்பதனால் ஏற்படுகின்றது. படபடப்பும் மூச்சிறைப்பும் சேர்ந்து அதிகமான சுகவீனத்தையும் தளற்சியையும் உண்டாக்குகின்றன.

வியர்வை
அளவுக்கதிகமான வியர்வையும் இதய நோயின் அறிகுறியாகும். குளிர் காலத்தில்கூட அவர்களுக்கு அதிகமான வியர்வை இருக்கும். மாரடைப்பு {HEART ATTACK} வந்தவர்களுக்கு உடம்பு குளித்ததுபோல் வியர்த்திருக்கும்

உடல் தளர்வு (WEAKNESS)
இதய நோய் உள்ளவர்களின் உடல் நாளுக்கு நாள் மெலிந்தும் தளர்ந்தும் போய்விடும். முகம் பொலிவிழந்து காணப்படும். வயதான தோற்றத்தைக் கொடுக்கும்

வீக்கம் (SWELLING)
பாதம், கணுக்கால், கால்கள், முகம், வயிறு ஆகிய இடங்களில் வீக்கம் காணப்படும்.இதன் காரணமாகவே அதிகமான சோர்வு, தளர்ச்சி, பசியின்மை ஆகியவை உண்டாகின்றன.

மேற்குறிப்பிட்டுள்ள அறிகுறிகள் இதய நோய்க்கான அறிகுற்கள் என்றாலும் வேறு பல நிலைகளிலும் நோய்களிலும் இவைகள் தோன்றலாம்.

 

 

 

 

 

உதாரணமாக நடு வயிற்றின் மேல் பகுதியில் குடல் புண் (ULCER) காரணமாக வலி வரலாம். இதய நோயின் காரணமாகவும் அங்கு வலி வரலாம்.அவற்றுள் உண்மையான காரணத்தை அறிந்து முறையான மருத்துவம் செய்யவேண்டும்

இங்கே ஒரு முக்கியமான செய்தியை சொல்லவேண்டும். மேல் வயிற்றிலே வலி வரும்போது இது வாய்வு வலிதான் என்று நினைப்பது தவறாகும். ஏன் எனில் வயிற்று வலியை இதய வலி என்று நினைத்து இதயத்துக்கு மருத்துவம் செய்தால் தவறில்லை.ஆனால் இருதய வலியை வயிற்று வலி என்று எண்ணி இதயத்துக்கு வைத்தியம் செய்யாவிட்டால் உயிரையே இழக்க நேரிடலாம். எனவே இந்த இதய நோயின் அறிகுறிகளை மறவாமல் வைத்திருங்கள்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker